பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனங் கசக்து போனதுவோ

ஈரமிலா வெறிக்கிறுக்கால்
           ஈயமிட்டுப் பழிகொண்டோம்.
 காந்திமகான் அன்புரையும்
     கன்னித்தாய் சேய்மொழியும்
 சாந்திவளர் கெளதமஞர்
     சாற்றியதும் மறைந்தனவே!
 கருணைப் பெருங்கடலே
     கருதறிய நற்பொறையே
 குருட்டுச் சுயநலத்தின்
     கொடுமையிலும், நீதந்த
 அறிவை முறைப்படுத்தி -
    ஆழ்ந்துணராச் சிறுமையிலும்
 கறைபட்டுக் குறியிழந்த
     கண்திறவா மக்களிடம்
 தந்தையுன்றன் உளத்தினிலே
     தயை ஓங்க வழியுண்டோ?
 இன்னுமுமக் கெங்களிடம்
     இரக்கம் பெருகிடுமோ?
 மக்களினம் செய்கின்ற
     மதியீனம் பொறுப்பாயோ?
 தக்கவரை மேன்மேலும்
     தரணிக்குப் போக்குவையோ?
 மனங்கசந்து போனதினால்
     மன்பதையைத் தான்முடிக்க
 அணுக்குண்டை அனுப்பினையோ
     அறிந்திலனே என்னிறைவா.

             95

95