பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 மானிடா எழுக

மதம்படு கரியெலாம் வணங்கிட அடக்கும் முதற்படுந் திறமையில் முதிர்ந்தவன் நீயே. மாண்பு மிக்குடைய மானிடா எழுக வையகந் தன்னை வானக மாக்குக.

          4

ஞாலமீ துன்றன் நனிசிறு வாழ்க்கையும் காலவெள் ளத்தினிற் கண்டதோர் திவலையாம்; உண்மையி தாயினும் ஒதுமக் காலமும் வண்மையாற் கடந்து வாழ்ந்திடும் செயல்கள் விண்ணுளோர் கண்டு வியப்புறும் படியாய்ப் பண்ணிடும் அருந்திறல் படைத்தவன் நீயே ; மாண்பு மிக்குடைய மானிடா எழுக வையகந் தன்னை வானக மாக்குக.

           5

அழிந்துபோ யொருநாள் அனலிடை மூழ்கி ஒழிந்திடும் யாக்கையை உடையவன் ஆயினும் செயற்கரும் பணியால், தீஞ்சுவைக் கலைகளால், உயிற்குளே நின்றிடும் ஒருவனைஅறிவதால் என்றும் புவிதனில் இருந்திடும் சிறப்பினை நன்றுநீ கொண்டனை; நலமெலாம் பெருகவே மாண்பு மிக்குடைய மானிடா எழுக வையகம் இன்றே வானக மாக்குக


           97