பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நீல மலர்க்கண்

நீல மலர்க்கண் ணிரண்டு-என்றன் .

   நெஞ்சை மயக்கிடும் வண்டு மாலை இருளென வளரும்-அவள் தன் 
   மைக்குழ லில் உளம் தளரும் 

கன்னக் குழிமதுத் தேக்கும்- அதுவென்

   காதலை மீறியுண் டாக்கும் மின்னைப்போல் தோன்றும் சிரிப்பு-கொஞ்சம்
  வேறுபட் டாலெங்கும் நெருப்பு

கொஞ்சும் மொழிகுயி லோசை-அதிலே

   குமிழியிட் டோங்குமென் 
   னாசை 

கஞ்ச மலர்முகைக் கொங்கை-ஏந்துங்

   கவின்நிறை வாளந்த மங்கை அமுதுடன் வந்தசெய் யாளோ-என்மேல்
   அன்பு சிறிதும்செய் யாளோ எமனுக்கு நானின்று தத்தம்-மீட்கவே
   எண்ணிடு மோஅவள்சித்தம்?


            99