உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்ககாலப் போர்கள் -2

87

சோழப் பெரும் பேச ஆட்சியுமே வங்கத்தின் நாகரிகத்தைத் தமிழக நாகரித்தின் ஒரு நறு நிழலாக்கி, அதை வட திசையில் ஒரு நாகரிகச் செழும்பண்ணையாகத் திகழச் செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

சிலப்பதிகாரத்தில் கனகன் என்று குறிக்கப்படும் அரசன் இந்தச் சகப்பேரரசன் - கனிஷ்கனே என்றும், விசயன் என்று குறிக்கப்படும் அரசன் அவனுக்குப் பேராதரவாயிருந்துஅவன் பேரரசாட்சியைப் பரப்புவதற்கு உதவியாயிருந்த வலிமை வாய்ந்த காசுமீர நாட்டரசன் விசயாலயனே என்றும், இருவரையும் சேரன் வென்றடக்கிய இரண்டாங் கங்கைப் போர் அவன் பேரரசின் கிழக்கெல்லையும் ஆந்திரப் பேரரசர் மேற்கெல்லையுமாகிய வடமதுரை அல்லது தில்லிநகரப் பகுதிக்கருகிலேயே நடைபெற்றிருக்கவேண்டுமென்றும் கருத இடமுண்டு. பின்னாளைய சோழப் பெரும் பேரரசன் முதலாம் இராசேந்திரன் வெற்றிகளும் மதுரை மண்டலம் அல்லது வட மதுரைவரைக்கும் பரவிச் சென்றன என்று அவன் மெய்க் கீர்த்தி கூறுகின்றது.

கனிஷ்கனுக்குப் பிற்பட்ட அரசர் தமிழகச் சைவ வைணவ நெறிகளை ஏற்றுச் சைவவைணவப் பெயர்களை மேற்கொண்டிருந்தனர் என்பதும், அவர்கள் பேரரசிழந்து மிகச் சிறு சிற்றரசராகவே இயங்கினர் என்பதும் இவ்விளக்கத்துக்கு வலுத்தருவது ஆகும். ஆயினும் இராசேந்திரன் வெற்றிகளையே மறைத்தும் இருட்டடித்தும் வந்த வடதிசைப் பாசமும் தென்திசை அலக்கணிப்பும்மிக்க மாநில வரலாற்றாசிரியர்கள் இப்பண்டைச் செய்திகளை ஆராய்ந்து மெய்மை காண விழையாது ஒதுக்குவதில் வியப்பில்லை.

கனகவிசயர் ஒரே அரசன் பாலகுமாரன் மக்களாகச் சிலம்பில் குறிக்கப்பட்டுள்ளனர். இது மேற்கூறிய விளக்கத்துடன் முரண்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் கால நிலைமைகள் வடதிசையாளர் உவர்ப்பு நீக்கி அதே சமயம் வேறு உவப்புக்கலவாத நிலையில் ஆராய்தற்குரியனவேயாகும். அதுவரையில் ஓரளவு மேற்கூறிய விளக்கமே வரலாற்று நிலைக்கு மிக அணுக்க நல் விளக்கமாகக் கொள்ளப்படலாகும்.