உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்ககாலப் போர்கள் -3

101

புலவர் பாடாது வரைக என் நிலவரை!.....
இரப்போர்க் கீயா இன்மை யான் உறவே!' (புறம் 72)

தமிழகம் முன் என்றும் கண்டிராத கம்பலை

போரில் எதிரிப்படைகள் பல கடல்கள் உடைத்தேரடி வருவதுபோல ஆரவாரித்த வண்ணம் வந்து நிறைந்தன. பாறைகள்மீது மோதும் பேரலைகள்போல அவை பாண்டியன் படைகள் மீது வந்து வந்து மோதின. ஆனால் ஒரு பகலுக்குள் அவ்வணிகள் யாவும் அலைகள் போலவே சிதறின. பாண்டியன் தேர்ப்படைகளும், யானைப் படைகளும் எதிரிகளின் படை களை உழுநிலமாக்கி எங்கும் உழுதன. வில்வீரர் வெற்றி விதைகளாகிய அம்புகளை எங்கும் தூவி விதைத்தனர். குதிரை வீரர்கள் பொலி எருதுகள் கதிர்களை மிதித்துத் துவைப்பது போல எதிரிகளின் உடலங்களை எங்கும் சவட்டி அழித்தனர். எதிரிகள் சிதறி ஓடத் தலைப்பட்டளர். கிலியினால் ஒருவர் மீதொருவர் உந்தியுல் முந்தியும் தாறுமாறாகக் குழம்பி ஆர்ப்பரித்தனர்.

அவர்கள் எழுப்பிய இந்த ஆரவாரம் போர்க்களத்துடன் நிற்கவில்லை. நாடெங்கும் பரந்தது. அதுபோன்ற கம்பலை யைத் தமிழகம் அதற்குமுன் என்றும் கேட்டதில்லை.அத்துடன் இரண்டாயிரம் ஆண்டு சென்ற பின்னும் தமிழர் காதுகளில் அது இன்னும் ஒலிக்கும்படி சங்க இலக்கியப்பாடல் பல அதனை நமக்கு பதிவுசெய்து தந்துள்ளன.

"கால் என்னக் கடிதுரா அய்
நாடு கெட எரிபரப்பி,
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,
அரசு பட அமர் உழக்கி,
முரசுகொண்டு களம்வேட்ட
அடுதிறல் உயர் புகழ்வேந்தே!"
(மதுரைக் காஞ்சி 125-130)

என்று போர் வெற்றிகொண்ட மன்னனை மாங்குடி மருதனார் பாராட்டியுள்ளார்.

'பாண்டியன் இளையன், போர் அனுபவமற்ற முதிராச் சிறுவன். அவனை எதிர்த்தவரோ களங்கண்ட காவலர், பேராற்றல்மிக்க பேரரசரும் வீர வேளிரும் ஆவர். அவன் ஒருவன், அவர்கள் எழுவர்! இது கோழமைமிக்க அநீதி, ஆனால் பேராற்றல் மிக்கவர் அநீதிச்செயல்' என்று அந்நாளைய தமிழர் எண்ணினர். ஆயினும் பாண்டியன் இந்த அநீதியை-