சங்ககாலப் போர்கள் -3
107
சோழன் சுற்றுப்புறம் உள்ள ஊர்களும் கழனிகளும் பூங்காக்களும் எரித்துப் பாழாக்க முனைந்தான். அப்போது அவனுடன் இருந்த புலவர் ஆலத்தூர் கிழார் அவனுக்கு அறிவுரை கூறினார். "புறாவின் இன்னலை விலக்கிய சிபிச் சோழன் மரபில் வந்தவன் நீ! வீரமின்றி ஒதுங்கி வாழும் இவ் அரசனை எதிர்ப்பதும் அதற்காக அழிவு சூழ்வதும் உனக்கு நன்றன்று" (புறம் 36.) என்று உரைத்தார்.
இறுதியில் சோழன் வஞ்சி முற்றுகையில் வெற்றி பெற்றான். இவ்வெற்றியைப் பெண்பாற் புலவர் மாறோக்கத்து நப்பசலையார் இரண்டு பாட்டுக்களில் (புறம்: 37, 39.) சிறப்பித்துள்ளார்.
காரியாற்றுப் போர் II
கிள்ளிவளவன் அல்லது மாவண் கிள்ளியின் ஆட்சியின் பிற்பகுதியில் சேரரும் பாண்டியரும் மண்ணாசையால் உந்தப் பட்டுச் சோழ நாட்டின் மீது படையெடுத்தனரென்றும், சோழன் தம்பியால் காரியாற்றில் மாற்றரசர் இருவரும் முற்றிலும் முறியடிக்கப்பட்டனரென்றும் மணிமேகலைக் காப்பியம் நமக்குத் தெரிவிக்கிறது.
முதற் காரியாற்றுப் போரைப்போலவே இப்போரும் தமிழக வட எல்லையிலேயே நடைபெற்றது என்பது வியப்புக்குரியது. ஏனெனில் எதிரிகள் இருவருள் பாண்டியன் தென் திசையிலும் சேரன் மேல் திசையிலும் இருந்தனர். சோழன் தமிழகத்தில் அடைந்துவரும் முதன்மையை வடபுல அரசருடன் சேர்ந்தேனும் சேர பாண்டியர் ஒடுக்க நினைத்திருத்தல் கூடும் என்பதே பொருத்தமாகத் தோற்றுகிறது.
எஞ்சா மண் நசைஇ இகல்உளம் துரப்ப
வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி
முறஞ்செவி யானையும் தேரும்மாவும்
மறங்கெழு வயவாள் வயவரும் மிடைந்த
தளைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்
சிலைக்கயல் நெடுங்கொடி நெடுவேல் தடக்கை
ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலிகெழுதடக்கை மாவண்கிள்ளி!
(மணிமேகலை XIX 119-127.)
குளமுற்றத்துப் போர்
இரண்டாம் காரியாற்றுப் போருக்குப் பின் கிள்ளிவளவன் பாண்டியரையும் சேரரையும் அவர்கள் நாட்டுக்குத்