பேரரசுப் போட்டி
117
கோடியில் மகத நாகரிகம் ஆரிய இனத்துடன் கலப்புற்றுத் தன்னை ஆரிய நாகரிகம் என்றே அழைத்துக் கொண்டாலும், அது பழைய நாகரிகத்தின் ஒரு புதுமலர்ச்சியாகவே நிலவிற்று. இதனைப் பழைய ஆரிய நாகரிகம் அதாவது புத்த-சமண,பாளி- பாகத கால ஆரிய நாகரிகம் என்னலாம். இது தமிழகப் பண்பாட்டுடனும் ஆந்திர-கலிங்கப் பண்பாட்டுடனும் இழைந்து, அவற்றின் நிலவொளியிலும் தென்றலிலும் வளர்ந்ததாதலால், அவற்றுடன் இணைந்து ஒரே நாகரிகக்கொடியாய் இலங்கிற்று. வடமேற்கிலிருந்துவந்த புது அயல் பண்பாடுகளின் தாக்குதலை எதிர்த்துச் சமாளிக்கும் வகையில் அந் நாகரிகங்கள் தமிழகத்தின் உதவியையும் ஒத்தாசையையும் நாடின.
கி. மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையும் வடமேற்கிலிருந்து யூச்சியர், குஷாணர், பார்த்தியர், பஃலவர், ஊணர் என்ற பல புதிய முரட்டு இனத்தவர்கள் படையெடுத்தனர். அவர்கள் வடமேற்கிலும் வடக்கிலும் மேற்கிலும் பல பேரரசுகளையும் அரசுகளையும் அமைத்து விரைந்து பரவினர். மாநில வாழ்வு இதனால் மீண்டும் கலகலத்தது. அது மட்டுமன்று. இதுவரை அயல் இதுவரை அயல் அலைகளால் பாதிக்கபடாதிருந்த கீழ் திசை நாகரிகக் கொடியையும் அவை பாதிக்கத் தொடங்கின. அக் கீழ் திசைக்கொடி இதுவரை தமிழகத்தையே தலைமையகமாகவும் உயிர் நிலையாகவும் கொண்டு, ஒன்றுபட்ட ஒரே நாகரிகமாக வளர்ந்து வந்தது. புதிய அலை அதனைத் துண்டுபடுத்தி, இருவேறு வகைப்பட்ட வளர்ச்சிகளாக்கிற்று. இரண்டிலும் பெருத்த மாறுபாடுகளை உண்டுபண்ணிற்று.
வடதிசையில் பாளி - பாகத மொழி சார்ந்தும், புத்த- சமண சமய நெறிகள் சார்ந்தும் வளர்ந்த மகத நாகரிகத்தில் முதலில் மொழி மாறுபட்டது.பாளி-பாகத நாகரிகமாயிருந்த அது சமஸ்கிருத நாகரிகமாக மாறிற்று. இதனை யடுத்துச் சமய வாழ்வும் திரிபுற்றது. புத்த- சமணநெறி சார்ந்த நாகரிகமாயிருந்த அது இப்போது வைதிகநெறி சார்ந்ததாயிற்று. சோழப் பேரரசின் ஆற்றல் மூலம் மீண்டும் தாய்மொழி சார்ந்த நாகரிகம் மாநிலமெங்கும் பரவும்வரை அது ஒரு புதிய இடைக்கால ஆரிய நாகரிகமாக ஆயிரஆண்டுக்கு மேற்பட வளர்ந்தது.
வடமேற்கு அலை நாகரிகக் கொடியின் தலையூற்றாக இருந்த தமிழகத்தை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால் அது பாதிக்காமலே இருந்திருந்தால், இந்தியாவின் வரலாறும் ஆசியாவின் வரலாறும், கீழ் திசையின் வரலாறும் வேறாய் இருந்திருக்கும். உலக நாகரிக வரலாறே வேறுபட்டிருக்கும். வடமேற்கு அலை