பேரரசுப் போட்டி
127
பட்டயம் கூறுகிறது. இச் செயலைத் தசரத ராமன் செயலுடன் அது ஒப்பிடுகிறது.
சாளுக்கியரைத் தோற்கடித்தவர் மூவர் என்று விக்கிரமாதித்தனும் கூறுகிறான். இம் மூவருள் நரசிம்மவர்மனுடனிருந்த மற்ற இருவர், பல்லவர் வடதிசையாண்டு முந்திய சாளுக்கிய வெற்றியால் பதவியிழந்த பல்லவ மாகாணத் தலைவன் ஒருவன். மற்றவன் இலங்கையரசனான மானவர்மனே யாகும். இவன் பகைவர்களால் தன் அரசிழந்து, காஞ்சியில் நரசிம்மவர்மனிடம் தஞ்சம் புகுந்திருந்தான் என்று இலங்கைப் பண்டை வரலாற்று ஏடான மகாவம்சோ கூறுகிறது. சாளுக்கியப் படை யெடுப்பில் அவன் உதவி செய்ததன் பயனாக, பல்லவன் நரசிம்மவர்மன் அவனுக்கு ஒருபடை கொடுத்துதவி இலங்கை அரசியலை மீட்கும்படி அனுப்பினான். ஆனால் மானவர்மன் தன் எதிரி அரசனான அட்ட தத்தனுடன் போர் புரிந்து தோற்றுவிட்டான்.
பல்லவர்கள் சேர சோழ பண்டியரைப் போலவே நல்ல கடற்படை உடையவராய் இருந்தனர். வெளி நாட்டு வாணிகம், குடியேற்றம், வெளிநாட்டுக் கல்வெட்டுக்கள் ஆகியவற்றில் முத்தமிழ் அரசர் பெயர்களும் நாட்டுப் பெயர்களும் அடிபடுவதுபோலவே, பல்லவ அரசர் பெயரும் குடிகள் பெயரும் மிகுதி இடம் பெற்றுள்ளன.
மானவர்மன் தோல்வி பற்றிக் கேள்விப்பட்ட நரசிம்மன் ஒருபெரிய கடற்படையை இலங்கைக்கு அனுப்பினான். கடல் தள ஆதரவு பெற்ற இப்படை மானவர்மன் எதிரியாகிய அட்ட தத்தனைப் போரில் முறியடித்துக் கொன்று, மானவர்மனை அரசனாக்கிற்று என்று அறிகிறோம்.
பெரும்புகழ்ப் பல்லவர்
பல்லவர்களில் மிகப்பெரும்புகழ் பெற்றவர்கள் முதலாம் மகேந்திரனும் முதலாம் நரசிம்மவர்மனுமே ஆவர். நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்று ஒரு பட்டப் பெயரும் உண்டு. மாமல்லபுரத்தில் கடற்கரைக்கோயில்கள் மகேந்திரன் காலத்தில் தொடங்கப்பட்டாலும் இவன் காலத்திலேயே முடிவுற்றன. அதன் துறைமுகத்தையும் அவன் செப்பம் செய்து, அதையேதன்பேரரசின் தலைமைத்துறைமுகமாக்கினான். அவன் கடற் படைத்தளமாக இருந்தது அதுவே. இலங்கைப் படை எடுப்பு அங்கிருந்தே தொடங்கிற்று. அவன்பட்டப்பெயராகிய மாமல்லன் என்பதிலிருந்தே மாமல்லபுரம் அப் பெயர் பெற்றதெனப் பல வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். ஆனால் சங்க