வான விளிம்பு
19
பாரதப் போரையும் பெருஞ்சோற்றுதியனையும் தம் காலச் செய்தியாகவே முரஞ்சியூர் முடிநாகராயர் குறிக்கிறார். அதே செய்தியைப் பழங்காலச் செய்தியாகக் குறிப்பவர் மாமூலனார் (அகம் 233). சிலப்பதிகாரமும்
'ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன் றெழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன்' [29-வது வாழ்த்துக் காதை]
என்று இதே நிகழ்ச்சியைப் பழங்காலச் செய்தியாகக் குறிக்கிறது.
பாரதத்துடன் தொடர்புடைய இப்பாடல்களைப் போலவே, இராமாயணத்துடன் சமகாலத் தொடர்புடையதாகத் தோற்றும் மற்றொரு பாடலும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. இது பொதுவாக நிலையாமை பற்றி வான்மீகியார் என்ற புலவர் பாடிய பாட்டே [புறம் 358]. இப் பெயர் சமஸ்கிருதத்தில் இராமாயணம் இயற்றிய வான்மீகியையோ, இராமாயணத்திலேயே கதை யுறுப்பினராகக் காணப்படும் வான்மீகியையோ நினைவூட்டுவது ஆகும்.
ஆராய்ச்சிப் போக்குகள்
பாரதம் இராமாயணம் ஆகிய இதிகாசங்களை வரலாற்று நிகழ்ச்சிகளாகக் கொள்பவருள்ளும் பலருக்கு இப் பாடல்கள் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் தந்துள்ளன. அவற்றைக் கற்பனைக் கதையென்று கருதுபவர்களிலும் பலருக்கு இது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் தரத்தவறவில்லை. ஏனென்றால் அவ்விரு சாராருமே இக் கதைகளைச் சமஸ்கிருதத்திற்கும் ஆரிய நாகரிகத்துக்குமே உரியன என்று எளிதாக முடிவுக்கட்டி வைத்துள்ளனர். இதற்கு மாறான சான்றுகளோ கருத்துக்களோ வந்தால் அவற்றை அவர்கள் செவியில் போட்டுக் கொள்ளுவ தில்லை. அவற்றை மெல்ல நழுவவிடவே எண்ணுவர். அவர்கள் தரும் விளக்கங்களும் இதற்கேற்பச் சுவைகரமானவை.
வான்மீகியாரைப் போன்ற புலவர் தேவமொழிக்கே உரியவராதலால் மனித மொழியாகிய தமிழில் அப் பெயர் கொண்ட வேறு யாராவதுதான் பாடியிருக்க முடியும் என்று இத்தகையவர் சிலர் கூறுகின்றனர். அத்துடன் பெருஞ் சோற்றுதியன் சேரலாதன் பாரதப் போர்க்காலத்தில் இருந்திருக்க முடியாதென்றும், அவன் முன்னோர்கள் செயலையே புலவர் அவன்மீது ஏற்றிப்பாடியிருக்கலாம் என்றும்கூறுவர். இன்னும் சிலர் ராமாயண பாரத நாடகங்களில் நடிகர்கள் கூறுவதற்-