52
தென்னாட்டுப் போர்க்களங்கள்
வேள்விக்குடிச் செப்பேடுகளின் காலத்துக்கும் இடையே ஐந்நூறு ஆண்டு இடையீடும் பெருத்த அரசியல் குழப்பமும் மாறுபாடுகளும் ஏற்பட்டிருந்தன. ஆயினும் சங்க காலத்திலேயே முற்பட்டவனான பல்சாலை முதுகுடுமிப் பாண்டியன் அளித்த நன்கொடையை பல நூற்றாண்டுக்கால அரசியல் மரபும், அரசியல் அரங்க மரபும் அறிந்து பாண்டியன் உறுதிசெய்ய முடிந்தது. இது போலவே தேவார காலத்துக்கும், பெரிய புராண காலத்துக்கும் ஐந்நூறு ஆண்டு இடையீடும் பெருத்த அரசியல் மாறுபாடுகளும் இடையே இருந்தன, ஆயினும் பெரிய புராணம் பாடிய புலவர் சேக்கிழாரால், முற்பட்ட கால அரசியல் பின்னணி நிலைகள் சரிவர உணர்ந்து தீட்டப் பட்டுள்ளன. அதே காலத்திலிருந்த சயங்கொண்டாரும் ஒட்டக்கூத்தரும் பெருஞ் சோழருக்கு ஆயிரமாண்டு முற்பட்ட சோழர்கள் வரலாற்றை அவர்களைப்பற்றிய சின்னஞ் சிறு செய்திகளையும் வரலாற்று மரபு வழியே அறிந்து உரைத்துள்ளார்.
தமிழர் வரலாற்றுணர்வுக்குப் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டொன்று வியக்கத்தக்க நற்சான்று அளிக்கிறது. ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட அப் பாண்டியன் சோழர் அரண்மனையையும் தலைநகர் முழுவதையும் அழித்து விட்டான். ஆனால் பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கரிகாலன் முன் அதனை அரங்கேற்றுவதற்காகக் கட்டப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை அழியாது காத்தானாம்! இதில் வரலாற்று மரபின் ஆற்றலையும் காண்கிறோம். தமிழர் கலையார்வத்தின் அருமையையும், ஆட்சியெல்லை கடந்த தேசீய ஆர்வத்தின் பெருமையையும் பார்க்கிறோம், ஏனெனில் கரிகாலனும் சோழன்தான், சோழன்மீதுள்ள கோபம் அவன்மீது பாயவில்லை. ஏனெனில் அவன் பாடல்கொண்ட சோழன், தமிழகத்துக்குத் தேசீயப் பழம் புகழளித்த சோழன்! கலையார்வம், தேசீய ஆர்வம், வரலாற்று மரபு ஆகிய மூன்றும் இங்கே பன்னிரண்டு நூற்றாண்டுகள் தாண்டிச் செயறாற்றுவது காண்கிறோம். சங்க இலக்கியத்தின் உதவி கொண்டு நாம் இன்று தமிழர் வாழ்க்கை பற்றியும், அறிவு நிலைபற்றியும், அரசியல் சமுதாயப் பழக்க வழக்கங்கள்பற்றியும் அறியும் செய்திகள் பல. அவற்றால் நாம் அறியவரும் போர்களின் தொகையும் நூற்றுக்கணக்கானது. வரலாற்று மரபு இழந்த நம் நாட்களில் அவற்றுள் பலவற்றின் முன்பின் வரிசை முறை, கால இடச் சூழல்கள் ஆகியவற்றை முற்றிலும் விளக்கமாக அறிய முடிய வில்லை.வருங்கால ஆராய்ச்சிகளே அவற்றுக்கு மேலும் விளக்கம் அளிக்கவேண்டும். ஆயினும் தேசீய வாழ்வின் பொதுப்