உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தென்னாட்டுப் போர்க்களங்கள்

இலக்கியம் அது பற்றிக் கூறாதது வியப்பைத் தராமலில்லை. வரலாற்றாசிரியர் பலர் இது காரணமாக இவற்றைப் பிற்காலப் போலிப் புனைந்துரை என முடிவு செய்ய எண்ணுகின்றனர். ஆனால் இவை சங்க காலத்திறுதியிலோ அல்லது புராண வரலாற்று மரபுகளின் வானவிளிம்பிலோ உள்ள மற்றொரு கரிகாலன் செயலாகவும் இருத்தல் கூடும். ஏனெனில் பிற்காலச் சோழரின் அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுப் பட்டயங்கள், லெய்டன் பட்டயங்கள் ஆகியன பெருநற்கிள்ளி என்ற சோழனுக்கும், செங்கணான் என்ற சோழனுக்கும் இடைப்பட்டவனாக ஒரு கரிகாலனைக் குறிக்கின்றன.

வடதிசைப் படையெடுப்பு முதலிய செய்திகள் முற்றிலும் புனைந்துரையென்று கூறத் கக்க தன்று என்பதை 8-ம் நூற்றாண்டுக்குரிய மாலேப்பாட்டுப்பட்டயங்கள் முதலான தெலுங்கு ஆதாரங்களும், சிங்கள வரலாற்றேடான மகாவம்சோவும் காட்டுகின்றன. ஆந்திர நாட்டிலும் மைசூர் நாட்டிலும் ஆண்ட சோழ மரபினர் தம்மைக் கரிகாலன் மரபினர் என்று பெருமையுடன் கூறிக் கொள்வதை நோக்க, கரிகாலன் அப்பகுதியை வென்று ஆண்ட காலத்தில் அவன் ஆட்சியாளராக அமர்த்திய சோழர் குடி இளவல்களாகவே அவர்கள் இருத்தல் கூடும் என்று கருத வேண்டி யிருக்கிறது. மிகப் பிற்பட்ட காலங்கள் வரையுள்ள பல மரபினர் ஹைதராபாதில் உள்ள வாரங்கல் ஆண்ட காகதீய மரபினர், விஜயநகர ஆட்சிக் காலத்தில் கார்வெட் நகர் ஆண்ட சாளுவ மரபினர், ஒரிசா அல்லது கலிங்கம் ஆண்ட கங்க சோடர் ஆகியவர்களது பெருங் கால இடப் பரப்பு கரிகாலனின் பரந்த வெற்றிகளுக்கு சான்று தருவன வாகும்.

தெலுங்குக் கல் வெட்டுக்களில் பலவற்றில் ஒரு சமஸ்கிருதப் பாட்டின் அடிகள் ஓயாது பல்லவியாகக் காதில் மணி யோசைபோல ஒலிக்கின்றன. மூன்று கண்ணுடைய ஏதோ ஒரு அரசன் கரிகாலனுக்குப் பணியா திருந்ததையும், கரி காலன் அவன் மூன்றாம் கண்ணைக் குடைந்தெடுத்து விட்டதையும் காவிரிக்குக் கரைகட்டிய செய்தியையும் அது புனைந்து புகழ்கின்றது. அப்பாடல்,

சரண சரோருஹ
விஹத விலோசன
த்ரிலோசன
ப்ரமுகாகில
ப்ருதி வீசுவர
காரில்