உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

தென்னாட்டுப் போர்க்களங்கள்

"மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப, இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப, சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப, உழவர் ஓதை மறப்ப, விழவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன். (புறம் 65)

"முரசு முழங்கவில்லை.யாழ் இசையை மறந்தது. அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன. சுறுசுறுப் பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை. உழவர் கழனிகளில் உழுதலைத் தவிர்த்தனர். ஊர்ப்புற வெளிகள் விழாவயரும் கூட்டங்கள் இன்றி வெறிச்சென்றிருக் கின்றன" என்று அவர் சேரநாட்டு நிலையைச் சித்திரிக்கிறார். ஞாயிறும் திங்களும் எதிரெதிர் நின்று போரிட்டுத் திங்கள் சாய்வதுபோல் சாய்ந்தான் சேரன்' என்று அம்மன்னர் மாண்பையும் புலவர் பெருமித இரக்கத்துடன் குறிக்கிறார்.

களத்தில் வெற்றியடைந்த கரிகாலனைப் பாடிய புலவர் ஒரு பெண் பாவலர். வெண்ணிக்களத்துக்குரிய வெண்ணி ஊரிலேயே பிறந்தவர். குயவர் தொழில் மரபினர். அவர் வெற்றி வீர அரசனைப் பாடினாலும், அப் பாட்டில்கூடச் சேரன் பெருமித முடிபே முனைப்பாக, ஆனால் கரிகாலனின் பெருமை தோன்றப் பாடியுள்ளார்.

கடற்போர் பல செய்த சோழ மரபில் வந்தவனே என்று அப் பெண்பாற் புலவர் அரசனை விளித்துப் பாடுகிறார்.

“நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! களி இயல் யானைக் கரிகால் வளவ! சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே, கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலக மெய்திப் புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே!" (புறம் 66) ன் "கரிகாலன் வெற்றியால் புகழ் பெற்றானாம்! சேரலாத வடக்கிருந்து புகழ் பெற்றானாம்! ஒருவனது, வீரத்தின் புகழ்! அடுத்தவனது, வீரத்தின் மானத்தின் புகழ்! எது நல்லது. பின்னது அல்லவா?' என்று கேட்கும் புலவரின் கேள்வி நயம் வெண்ணிப் போரின் வீரர் வீர நயங்களைவிடச் சிறந்தாகவே காணப்படுகிறது.