உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலப் போர்கள் -1

61

யவைமூன்றாம் வெண்ணிப்போர் ஆற்றிய இரண்டாம் கரிகால னைப் பற்றியவையேயாகும். முனைவர் இராசமாணிக்கனார் குறித்தபடி, கரிகாலனைப்பற்றிய பிற்காலப் பெரும் புகழ் மரபின் செயல்கள் யாவும், முதற்கரிகாலனுக்குரியன என்று ஒதுக்கப்பட்டன போக மிகுந்தவை, இவனுக்கே உரியனவாக லாம். முதற்கரிகாலனுக்குரியன என்று ஒதுக்கியவற்றுட் சில வும் இவற்றுட் சிலவும் ஒரு மூல முதல் கரிகாலனுக்குரியன ஆயினாலும்கூட, இரண்டாம் கரிகாலனின் வரலாற்றுப் பெருமை ஒரு சிறிதும் குறைந்துவிடாது, ஏனெனில் புனைந் துரையோஎன வரலாற்றாசிரியர் ஐயுறாத உறுதிச் செயல்கள் பெரும்பாலன இவன் செயல்களே யாகும். வடதிசைப் பெருவெற்றிகள், மேருவைச் செண்டாலடித் தல், வடதிசைப் பெருமன்னன் ஒருவன் மூன்று கண்ணில் ஒரு கண்ணைக் கொய்தல், காஞ்சி நகரம் நிறுவுதல் ஆகிய செயல் களே மூன்று கரிகாலனுக்குள் யாருக்குரியன என்று வரை யறுக்க முடியாதவை. கல்வெட்டுக்கள் பெருமைபடக்கூறும் கரிகாலன் உறையூரிலே ஆண்டதாகவே நீண்ட கால மரபுரை குறிக்கிறது. 'இரண்டாம்' (கடைசிச் சங்ககாலக்) கரிகாலன் உறையூரில் கோட்டை கொத்தளம் பெருக்கினாலும் காவிரிப் பூம்பட்டினத்திலேயே இருந்து அரசாண்டதாகத் தெரிகிறது. இது முன் இரு கரிகாலருக்கு மட்டுமே பொருந்தும். காஞ்சி நகரைக் கரிகாலன் வலிமைப் படுத்தியதாக மட்டும் கொள்ளாமல் புதிது நிறுவியதாக, அல்லது பெருநகராக்கிய தாகக் கொள்வதனால், இதுவும் முற்பட்ட கரிகாலர்களுக்கே பொருந்தும். ஆயினும், 'காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி கோயிலொடு குடிநிறிஇ! (பட். பாலை 244-5.286) என்ற பட்டினப்பாலை அடிகளும், 'முதியோர் அவைபுகு பொழுதில் தம்பகை முரண் சொலியவும் (பொருந, 187-8) என்ற பொருநராற்றுப்படையின் குறிப்புடன் உரைமுடிவு காட்டிய உரவோன் (மணிமேகலை) இளமை நாணி முதுமை எய்தி என்ற மணிமேகலைக் குறிப்பும் இரண்டாம் கரிகாலனே பெரும்பெயர்க்கரிகாலன் என்று சுட்டுகின்றன.