62
தென்னாட்டுப் போர்க்களங்கள்
ஆயினும் சிலப்பதிகாரத்தின் வஞ்சின மாலை குறிப்பிடும் கரிகாலன் மகள் ஆதிமந்தி வரலாறு பரணர் பாடிய அகப் பாடல் ஒன்றில் (அகம் 222) குறிக்கப்படுகிறது. எனவே புராணப் பெரும்புகழ்க் கரிகாலனும், சிலப்பதிகாரம் மணிமேகலை குறிக்கும் கரிகாலனும், கல்வெட்டுக்களில் புகழப்படுபவனும் இரண்டு கரிகாலர்களும் அல்ல, மூலமுதல் கரிகாலனே என்றும், அவன் புகழும் செயலிற் சிலவும் பிந்திய இரு கரிகாலர்களாலும் மேற்கொள்ளப்பட்டும் அவர்கள் மீது புலவரால் சார்த்தப்பட்டும் வந்தன என்றும் கூற இடமுண்டு.
இரண்டாம் கரிகாலன் (மூலமுதல் கரிகாலனை ஏற்றால் அவனை எண்ணி மூன்றாம் கரிகாலன்) செய்திகள் என்று பட்டினப்பாலை பெகுநராற்றுப்படை ஆகிய இருபாக்களாலும் உறுதியாகக் கூறத்தக்கவை கீழ் வருபவையே.
இரண்டாம் கரிகாலன் திருமாளவளவன் என்ற புகழ்ப் பெயருடையவன் (பட். பாலை. 299). அவன் கரிகாலன் என்ற பெயரும் உடையவன் (பொருநர்.138). அவன் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (ஷெ 130). அவன் பிறக்கும்போதே `அரசுரிமை பெற்றவன், ஆனால் சிறைப்பட்டு வாளால் விடுதலையுற்றான்.(பொருநர், 132; பட்.பா. 221-7) அவன் இளமை கண்டு முறைசெய்யும் ஆற்றல் பற்றி ஐயுற்ற முதுமை வாய்ந்த அமைச்சர் நாணும்படி முதுமை வேடத்தில் வந்து முறை செய்தான் (பொருநர்.187-8). பல சமயச்சார் பான விழாப்பணிகள், வேள்வி முறைகள் செய்தான் (பட். பா. 200-203). ஒளியர்,அருவாளர், பாண்டியர், வடவர், மேல்புலத்தவர்கள் ஆகியவர்களை வென்றடக்கியிருந்தான் (பட். பா.274-277). பொதுவர் மரபையே அழித்தான். இருங்கோவேளை முறியடித்தான்(பட்.பா.282-3). உறையூர்க் கோட்டை கட்டிப் புதுப்பித்தான்; ஏரி, குளம் வெட்டி உழவு பெருக்கி புதுக்குடியிருப்புகளும் கோயிலும் வகுத்தான் (பட். பா.284-6). வெண்ணிப்போர் ஆற்றினான் (பொருநர். 143-148).
மூன்றாம் வெண்ணிப்போர் பற்றிப் பொருநர் ஆற்றுப் படையில் முடத்தாமக் கண்ணியார் குறிக்கும் அடிகளாவன.
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரு வேந்தரும் ஒருகளத்தவிய