உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

தென்னாட்டுப் போர்க்களங்கள்

வடபுல எழுச்சி: கங்கைப்போர் I

சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலைக்காக வடதிசையில் படையெடுத்துச் செல்வதற்கு நெடுநாள் முன்பே கங்கைப் பேராற்றில் தன் முதற்போர் ஆற்றியிருந்தான். அவன் அப் போது வடதிசை சென்றது அவன் அன்னை கங்கையில் நீராடுவதற்குத் துணையாகவே. ஆயினும் படையணிகளுடன் சென்றதால் பல ஆரிய மன்னர்கள் திரண்டு வந்து அவன் போக்கைத் தடுத்தனர். செங்குட்டுவன் தனியாக நின்று அத்தனை வேந்தரையும் களத்தில் சிதறடித்தான், ஓடிய ஒரு சிலர் நீங்கலாக மீந்தவர் அனைவரும் உயிர் பிறிதாகினர். கங்கைப்படுகளம் ஒரே குருதிக்களமாகவும் பிணக்களமாக வும் ஆயிற்று.

சிலப்பதிகாரத்திலே மாடலன் வருணிக்கப்படுகிறது.

கூற்றாகவே இப்போர் "கங்கைப்பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை ஆட்டிய அந்நாள் ஆரிய மன்னர் ஈரைந்நூற்று வர்க்கு ஒரு நீயாகிய செரு வெங்கோலம் கண் விழித்துக் கண்டது கருங்கட் கூற்றம்!" (சிலப் XXV 160 - 164)

இப்போரின் கோரக்காட்சியையும் அதில் தனி யொரு வனாக நின்று செங்குட்டுவன் வெற்றிக் கூத்தாடியதையும் சாவின் தெய்வமாகிய கூற்றமே கண்ணிமையாமல் வியப் புடன் பார்த்துக்கொண்டிருந்தது என்று கவிஞர் வியந்துரைக் கிறார்.

இப்போரில் கொங்கணரும் கலிங்கரும், கருநாடரும், பங்களரும், கங்கரும் கட்டியரும். ஆரியரும் பிறரும் எதிரி களிடையே இருந்தனர். அவர்கள் பலமொழி பேசுபவர்கள். ஆரியமும் தமிழுமாக அவர்கள் மொழிகள் மயங்கிக் குழம் பின. போரின் மறக்கத்தகாத கண்கொள்ளாக் காட்சி செங்குட்டுவன் ஆற்றிய யானைப்படையின் தாக்குதலே என்று இளங்கோ கூறுகிறார்.

கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர் பங்களர், கங்கர், பல்வேற் கட்டியர் வட ஆரிய ரொடு வண்டமிழ் மயக்கத்துள் கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது. (சிலப் XXV 156)