பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ் நாட்டுக் காந்தி

1964, மே மாதம் 27ஆம் நாள் !

பாரதத்தின் இதயமாகத் திகழ்ந்த ஆசிய ஜோதி நேருஜியின் இதயம், துடிப்பை நிறுத்திக் கொண்ட துயர் மண்டிய நாள் அது!...

உலகப் பேரொளியாம் நேரு பிரான் அமரத்துவம் எய்திய புனிதம் நிரம்பிய நினைவு நாள் அது!...

உலகத்தின் பேரதிசயமாகவும் பேரதிசயத்தின் உலகமாகவும் விளங்கிய பாரதப் பிரதமர் நேருஜியின் மறைவுக்குப் பின், அவ்விடத்தை இட்டு நிரப்பத் தகுதியும் தியாகமும் பெற்ற உள்ளம் எது என்று உலக நாடுகள் அத்தனையும் இந்தியாவை நோக்கிச் சிந்தனைகளைத் திருப்பிவிட்டிருந்த சரித்திரப் பிரதானம் பெற்ற நாள் அது!...

ஆம்; அத்தகைய சரித்திர மகிமை பூண்ட அத்தினத்தை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மகத்தான தினமாக-ஒரு மாண்பு மிகுந்த தினமாக ஆக்கிய பெருமை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜ் அவர்களையே சார்ந்தது.

நேரு பிரானின் எதிர்பாராத மரணத்தினால் ஏற்பட்ட தாங்கவொண்ணாத அதிர்ச்சியும், ஈடு செய்யமுடியாத மாபெரும் இழப்புணர்வும் மேலிட்டு நாற்பத்தைந்து கோடி மக்களும் சொரிந்து கொண்டிருந்த நேரத்தில், நேருஜியின்