பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அறிந்தவர்கள் கொஞ்சம். ஆனால், இந்நாளிலே அவர்களைப் பற்றி அறியாதார் மிகமிகக் கொஞ்சம். தமிழ் இல்லங்களிலே இம் மூவரும் தனிப்பெருந் தியாகப் பிறவிகளாகச் சுடர் விடுதற்கு ஆதிகாரணமானவர் நம் தலைவரே என்பதை ஊர் அறியும்: ஏன் உலகமும் அரியுமே!

‘பணத்தைக் கடவுளாகக் கருதும் நாம், அந்தக் கட்டவுளைச் சிம்மாசனத்தை விட்டு வீழ்த்தி விட்டோம்’ என்று வருத்தப்படுகிறார் மகாத்மா, நம் அருமைத் தலைவர் அவர்களோ கடவுளைப்பற்றி எண்ணுவது உண்டு ஆனால் பணத்தைப் பற்றி எண்ணுவது கிடையாது. நேர்மையாளர்களைக் கடவுள் பரிசோதிப்பதாக எல்லா நூல்களிலும் சொல்லப்படுகிறது. திரு சிவஞானம் அதற்கு விலக்கல்ல. எதிர்த்து வந்த பயங்கரச் சூதுகள், தந்திரமாக நெருங்கிய அரசியல் சூழ்ச்சிகள், பொறாமை விளைவித்த இன்னல்கள் பல அடுக்குகள் - இவையெல்லா வற்றையும் சமாளித்து வந்திருப்பவர் அவர். ‘தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று நம் நாமக்கல் கவிஞர் சித்திரிக்கும் ‘அந்தத் தமிழன்’தான் அவர்.

ஆங்கிலேயருக்கு அடுத்த படியாக ஆதிக்கம் வகிக்கும். வடவரின் பிடியிலே மயங்கி விழவிருந்த தேசியத் தமிழ் மக்களைத் தக்க சமயத்திலே தமிழ் உணர்ச்சி ஊட்டித் தட்டியெழுப்பியதையும், தமிழகத்தின் தலை நகரைப் பாதுகாத்துத் தந்தையும், சரித்திர்ப்பிரசித்தி பெற்ற கன்னியாகுமரிப் பகுதிகள் நம் தமிழகத்தில் வந்து சேர வகை செய்ததையும், நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய வட எல்லை தெற்கெல்லைகளை மீட்டு வெற்றி காணப் பெரு முயற்சியோடு உழைத்து வருவதையும் தமிழினம் எப்படி மறக்க முடியும்? அவை மட்டுந்தானா?

நாட்டிலே அனாச்சாரக் கும்பல்கள் பெருகிக் கலாசாரத்தையே அழித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தில்