பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

சிலம்புச் செல்வரின் செந்தமிழ் முழக்கம் தெருவெல்லாம் எதிரொலித்துப் பண்டையப் பெருமையைப் பாதுகாத்து வருகின்றது.

தமிழ் கூறு நல்லுலகம் இலக்கியச் சிறப்புக் கொண்டது; அதைப் போலவே, தமிழினத்தன் தன்னே ரில்லாத் தலைவர் திரு ம. பொ. சி. அவர்களும் இலக்கியச் சிறப்புப் பெற்றவர், இலக்கியமும் அரசியலும் என்றென்றும் பொன் எழுத்துக்களிலே பொறித்துக் காட்டும் அளவுக்குச் சீரும் சிறப்பும் வாய்க்கப் பெற்ற செந்தமிழ்ச் செல்வரின் ஐம்பத்தாறாவது பிறந்த நாள் விழா ஜூன் 25-ஆம் நாளில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் மகாசபையின் உருவாக்கத்திற்குத் தம்மையே காணிக்கை வைத்த சிலம்புச் செல்வரின் விழா, தேனாம்பேட்டை - காங்கிரஸ் திடலில் நடைபெற்றது பொருத்தமுடையதும் ஆகும்.

தேசப்பற்றுக்கு ஓர் உறைவிடம் தேவையா? பொது நலப் பண்பிற்கு ஓர் உருவப்படம் வேண்டுமா? அறம் காத்து, அன்பு பேணி வாழ்க்கை நடத்தும் தத்துவத் துக்கு ஒரு விளக்கம் விரும்புகிறீர்களா? இவை அனைத் திற்கும் ஒருருவாகத் திகழ்கிறார் திரு ம. பொ. சி.

திருச்சி, அர்ச் சூசையப்பர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் திரு ஐயன்பெருமாள் கோனார் அவைத் தலைமை ஏற்றுப் பேசுகையில், பண்டைத் தமிழ் இலக்கியச் சிறப்புப் பூண்ட ‘வெள்ளணி விழா’வை விவரித்து, ம. பொ. சி. அவர்களின் இப்பிறந்தநாள் விழா, அந் நாளைய வெள்ளணி விழாப்போல கோலாகலமாகக் கொண்டாடப் படுவதாகக் குறிப்பிட்டார். கடலுக்கு உவமை காட்டி ‘எங்கள் தமிழ்ச் சிவஞானம் வாழ்க!’ என்று நெஞ்சுருக வாழ்த்தினார் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. கொள்கைப் பிளவுகளைக் கடந்து ஏனைய கட்சித் தலைவர்களும் புகழ்மாலை சூட்டினார்கள். தலைவர்