பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

இடத்தில் திரு லால்பகதூர் சாஸ்திரியை அமர்த்தி, தீர்க்க முடியாத பெரும் சிக்கலை காதும் காதும் வைத்த மாதிரி தீர்த்துவிட்ட மனிதாபிமானம் நிரம்பிய அச் செயல் திறனை உலக நாடுகள் பூராவுமே ஏகமனதாகப் பாராட்டின!— இப் பெருமையின் சரித்திரத்திற்கு ஒரு பொற்காலக் குறிப்பு ஈந்தவர் சரித்திர் புருஷர் காமராஜ் அவர்களே ஆவார்!- நேருஜியின் நல் வாழ்த்துக்களுடன் புவனேஸ்வரம் காங்கிரஸில் அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்ற காமராஜ், அதே நேருஜியின் இதயத்துக்குச் சாந்தியை நல்கி தம்முடைய கடமையைச் சஞ்சீவியாக அமைந்து செவ்வனே செய்துகாட்டி, இந்திய நாட்டின் பெருமையைக் கட்டிக் காத்துவிட்டார் அல்லவா?

காமராஜ் – லால்பகதூர் கூட்டு நாட்டுக்கு நல்ல சகுனம் நேருஜியின் இந்தியாவுக்கு இன்றுள்ள செல்வாக்கு தனி!

மெய்தான்.

உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் அந்தஸ்தையும் நிலைக்கச் செய்துவிட்ட ஓர் ஆதரிசப் பெயர் அது!

காந்திஜி ஒருமுறை குறிப்பிட்டார்:
தலைமையில் உள்ளவர்களின் நடத்தை ஒன்றுதான் பொதுமக்களிடம் நற்பலனை உண்டாக்கும்!”

ஆம்; முற்றிலும் உண்மை.

இப் பொன் உரைக்கு நிதர்சனமான ஓர் உரைகல் ஆனார் மதிப்புக்குகந்த காமராஜ்.