பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8


புடமிட்ட பொன் அவர்!

ஏழையாய்ப் பிறந்தார்.

ஏழைகளுடன் ஒன்றி வாழ்ந்தார்.

ஏழைகளின் வாழ்வுக்கும் வளத்துக்கு பாடுபட்டார்.

ஏழை பங்காளன் ஆனார்!...

அவர் பேச்சு நாட்டின் மூச்சு!

அவரே ஒரு சக்தி!...

காமராஜரின் உருவச் சிலையைத் திறந்து வைத்த தருணம் ஜவஹர்லால் அவர்கள், “காணக் கிடைக்காத அபூர்வமான தலைவர் காமராஜ்!” என்று இதயபூர்வமாகப் பாராட்டிப் புகழ்ந்தார்.

காலம் என்றென்றும் ஒலிபரப்பி அஞ்சல் செய்து கொண்டிருக்கும் அமரவாக்கு இது.

உயர் மரபும், வரலாற்றுச் சிறப்பும், தொன்மைப் பண்பும் கொண்டிலங்கும் நம் தமிழ் நாட்டின் அமைச்சர் தலைவராக காமராஜ் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை நடத்திவந்த அந்த ஆண்டுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படத் தக்கவையன்றோ!

மக்கள் தலைவரைப்பற்றி திரு சவான் குறிப்பிட்டார்: “... ஆவடிக் காங்கிரஸின் போது நான் சென்னைக்கு வந்திருந்தேன். திரு காமராஜ் அவர்களைப்பற்றி ஒரு உழவரிடம் விசாரித்தேன். அரசியலைப்பற்றி ஒன்றுமே அறியாத அவ்வுழவர். விண்ணை நோக்கிக் கைகளைக் கூப்பினார். ஆண்டவன் அவரை நீடுழி வாழச் செய்ய