பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

வேண்டும்!” என்று பகவானைப் பிரார்த்தனே செய்தார். மக்கள் உள்ளங்களில் தனி இடத்தைப் பெற்றவர் காமராஜர். இந்தியாவிலேயே மிக நிலையான அரசு தமிழகத்தில்தான் இருந்து வருகிறது. மக்களாட்சி முறையில் சிறப்புற ஆட்சி நடத்தும் ஒப்பற்ற தேசியத் தலைவர் காமராஜ். அவர் அறிஞர். இந்திய தேசிய ஒற்றுமைக்கு காமராஜ் அவர்களின் பணி மிக விரிந்த அளவில் கிட்டு மென்பதும் உறுதி!”

தெளிந்த தீர்க்கதரிசனப் பண்புடன்தான் சவான் அவர்கள் அன்று சொல்லியிருக்க வேண்டும்.

அண்மையில் நடந்த நிகழ்ச்சி இது.

தமது அறுபத்து மூன்றாவது பிறந்த நாள் விழாச் சுற்றுலாவின் போது, ஓரிடத்தில் காமராஜரின் கார் நின்றது. விவரம் அறிந்த ஏழைப் பெண்கள் ஓடிவந்து, என்ன தடுத்தும் கேளாமல், காமராஜரின் பாதங்களைத் தொட்டு வணங்கி ஆனந்தக் கண்ணீர் வடித்து, எங்களுக்குப் பசிக்குச் சோறும் எங்க வீட்டுப் பிள்ளைகளுக்கு கண் திறக்கப் படிப்பும் கொடுத்து வருகிற தெய்வம் - கண்கண்ட கடவுள் நீங்கள்!” என்று வாயார, நெஞ்சாரப் புகழ்ந்த செய்தியை நாளேடுகள் என்றும் மறக்க முடியாது.

இலவசக் கல்வி முறையை இப்போது கல்லூரி நுழைவாசலிலும் நுழைத்துவிடும் பெரு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் கர்ம வீரர் தலைவர் காமராஜ்!

காலம் ஓடியது!

வெள்ளையன் ஓடினான்.