பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

கணக்கான தியாகிகளின் முயற்சிகள் வீண் போகவில்லை. இவர்களில் மாபெரும் தலைவர்களான காந்திஜியும் நேருஜியும் இப்பொழுது நம்மிடையே இல்லை. ஆனqல் அவர்கள் காட்டிய வழியில் நாம் சென்று முன்னேற்றம் காண வேண்டும்!

நாம் அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டோம். பொருளாதாரப் பிரச்னையிலிருந்து விடுதலை அடைய வேண்டும். நமது மக்கள் மீது நம்பிக்கை வைத்து, இப் பிரச்னையை நாம் தீர்க்க வேண்டும். வருமான ஏற்றத் தாழ்வுகள் குறைய வேண்டும். சிலபேர்களிடம் செல்வம் ஒருசேர குவிவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். நில உடைமையும் பூரணமாக மாற்றப்பட வேண்டும்.

நாம் சமாதானத்தை விரும்பும் மக்கள். அண்டை நாட்டு மக்களுடனும் உலக மக்களுடனும் சமாதானத்துடன் வாழ விரும்புபவர்கள். தாழ்வான நிலையில் உள்ள நம் மக்களை முன்னேற்றத்துக்குக் கொண்டுவர வேண்டும். இதற்காக இமயப் பிரயத்தனம் செய்து வருகிறோம். நமது தற்காப்பும் அபிவிருத்தி அடைய வேண்டும். சோஷலிஸம் உருவாக நாம் ஒன்றுபட்டுச் சேவை செய்வோம் என்று உறுதிகொள்வோமாக!...”

இவ்வாண்டுச் சுதந்திர நாள்ச் செய்தியாக விடுத்திருந்த தலைவர் அவர்களது இதய ஒலியே மேற்கண்ட கருத்துரைகள்.

1948, ஜூன் 20ல் மவுண்ட் பேட்டன் தம்பதி இந்தியாவிலிருந்து விடை பெற்றபோது, “எத்தனைதான் ஏற்றமான பொருள்களும் பரிசுகளும் கிடைத்தாலும், மக்களின் அன்புக்கும் வாஞ்சைக்கும் மேலானது ஒன்றுமே இருக்க முடியாது!” என்று சுட்டினார். சத்தியத்தின் ஜோதி. அவர் வாக்கு அமரத்வம் வாய்ந்தது.