பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

மணம் தந்த மலர் வனம்-அதுவே முதுமையில் நான், அடையப்போகும் காசியும் பரமபதமுமாகும்’ என்று உரக்கக் கோஷமிடு “பாரத மண்ணே எனக்கு விண்ணுலகு ; பாரதத்தின் சிறப்பே என் சிறப்பு” என்று முழங்கு!

“உலகின் தாயே! எனக்கு ஆண்மையினைத்தா. பராசக்தியே! என் பலவீனத்தை ஒழித்துச் சக்தி அருள்! என் இயலாமையைப் போக்கி என்னை ஆண்மகனுக்கு” என்று அல்லும் பகலும் பிரார்த்தனை புரிந்துவா!...”

மனிதனாகப் பிறந்து, மனிதருள் மாணிக்கமாக வாழ்ந்து, தெய்வமனிதனாகவும் அமரத்துவம் எய்திய சுவாமி விவேகானந்தரின் நூற்றுண்டு விழா வினை பாரதம் சிறப்பு மிளிரக் கொண்டாடியது.

சீனமிலேச்சன் அண்டிக் கெடுத்து விட்ட வஞ்சகப் பெருங்கதை ‘முடியவில்லை-தொடரும்’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், விழா நடத்துவது பொருந்தாது எனினும், சுவாமிகளின் விழா, முன் நடந்த பாரதி விழாவைப் போல சமயச்சிறப்புடையதாகும். அதாவது, சந்தர்ப்பங்கள் ஒன்று கூட்டிக் காட்டியுள்ள வீரமுழக்கத்தின் இருவேறு வகைப்பட்ட சிங்கநாதங்களின் சங்கு முழக்கங்களை நாம் கேட்டு, தெளிந்து, வீரம் ஊட்ட வல்ல ஒரு தத்துவமாக வழிவிட்டு, வழிபடச் செய்யவல்லது இவ்வீர விழா.

அயலவனின் சூதும் வாதும் நமக்கு வேதனை அளித்துவரும் கட்டத்தில் நாம் பல நாட்களாகவே இருந்து வருகிறோம்.

சண்டைத்தியின் முதற்பகுதி அணைந்தது. அல்லது, அணைக்கப்பட்டதாக, தீவைத்தவனே அறிவித்தான்.