பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பெற்றிருக்கப் பழகி விட்டார்களென்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தின் தலை நகரில் ‘தேசிய ஒருமைப்பாடு’ மாநாடு நடந்தது, முடிந்தது. பெயரளவில் பெரிதாகத் தோன்றி, ஆனால், கொள்கை அடிப்படையில் குறுகிய உள்நோக்கம் கொண்டு இயங்கி முடித்திருக்கும் மேற்கண்ட மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தேசிய ஐக்கியப் பான்மையை வளர்த்துவரும் அமைப்புக்களுக்குக்கூட கிடைக்கவில்லை. இத்தகையப் பொதுவான குறைபாடுகளை விலக்கிக் காட்டும் வகையில், நேருஜியின் பேச்சு விளங்கியது, “இந்தியாவின் பொதுலிபியாக தேவ நாகரிலியியே என்றாவது ஒரு நாள் வந்தே தீரும்,” என்று பாரதத்தின் முதல்வர் பேசியிருந்ததை நாம் எவ்வாறு மறக்கமுடியும்? தாய்மொழியின் இன்றியமையாத் தன்மையைப்பற்றி அவ்வப்போது பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் மகான் காந்தியடிகள். அப்படியிருந்தும், நேருஜி எவ்வாறு பேசியிருக்கிறாரென்றால், நாம் மனம் வருந்தாமல் இருக்க முடியுமா? தேசிய இனங்களின் ஒற்றுமை, மா நாடு என்ற கூட்டுறவில் அந்த மாநாடு கூட்டப்பட்டிருந்தால், அந்தந்த மாநிலத்தின் தாய்மொழிக்குப் பாதுகாப்பும் வாழ்த்தும் அதிகாரபூர்வமாகக் கிடைத்திருக்குமோ அலிகார் வகுப்புப் பூசல் போன்ற சில்லறைச் சிக்கல்கள் நாணயமான முறையில் தவிர்க்கப்பட்டிருக்கவும் கூடுமல்லவா?

மதுரை மாநகரம் - புராணத்தலம் - திருவிளையாடல்களின் நாயகனாக சோமசுந்தரக் கடவுள் இயங்கியது போல, அத்திருவிளையாடல்களுக்கு அடித்தளமாக அமைந்தது ஆலவாய்ப் பெரு நகரான மதுரையேயாகும். இங்கேதான் காந்தி மகாத்மா - அரை நிர்வாணப் பக்கிரியாகவும் மாறினார்.

இத்தகைய பெருமை கொண்ட மதுரைநகர் தேசியப்பான்மையிலும் பெருமை கண்டது. அகில இந்தியக்