பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அணு ஆயுத வல்லரசுகளுக்கு
வழிகாட்டுகிறது பாரதம்!

இந்தியத் துணைக் கண்டத்தின் தலை நகரில் ‘அணு ஆயுத எதிர்ப்பு மாநாடு’ ஒன்று அண்மையில் நடந்தேறியது. அணுப் படைக் கலங்களைத் தடுத்து நிறுத்தித் தடைசெய்ய வேண்டியதற்கான அவசியச் சூழல்களைப்பற்றி ஆராய்ந்தது இம் மாநாடு.

அப்பொழுது, நேருஜி இவ்வாறு குறிப்பிட்டார்:

“...முழு படைக் குறைப்பு என்கிற முதல் லட்சியப் புள்ளியை அடைவதற்கான முதலாவது அவசியமான நடவடிக்கையாக, பயங்கரமானதும் ஒதுக்கத் தக்கதுமான இந்த அணு ஆயுதச் சோதனைகளை, அணு ஆயுத வல்லரசுகள் ஒருதலைப் பட்சமாகவேனும் நிறுத்த வேண்டும். காலமோ குறைவு; அணுக்குண்டுச் சோதனைகளுக்கு விரைவில் ஒரு தீர்க்கமான முற்றுப் புள்ளி. வைக்காவிட்டால், பிறகு எந்த நாட்டினாலும், என், எந்த மனித குலத்தினாலும் நிறுத்த முடியாத அளவிற்கு ஆபத்துக்கள் தலைக்குமேல் போய்விடக்கூடும். இந்தக் குறுகிய காலக்கட்டத்திலே, மனித குலத்தின் நல்லறிவுக்கும் புதுப்பயத்துக்கும் இடையே நடை பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு போட்டியாகவே, இவ்விதமான அச்சுறுத்தும் சோதனை அமைந்துள்ளது. ஒருசில அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்திவிட்டால் மட்டும், இத்தகைய பயங்கரமான நெருக்கடிக்குத் தீர்வுகண்டுவிட முடியாது. உண்மைதான். ஆனால், அதைவிட மேலான, ஒன்றினால், அதாவது, மனிதாபிமானம், மனப்பக்குவம், நெறியுணர்வு போன்ற குணநலக் குறிப்புக்கள் பக்குவம்