பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பயங்கரத் தன்மைகளும் மறைந்து, சுமுகமான உறவு தழைக்கவும், தார்மீகப் பண்பு செழிக்கவும் வழி பிறந்து விடும். ஆகவே பாரதத்தின் நல்லெண்ணக் கருத்துக்களைச் சிந்தையில் இருத்திச் செயற்பட வேண்டியது அணு ஆயுத வல்லரசுகளின் முதற் கடனாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதே நேரத்தில் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவப் பொன் மொழிகள் சிலவற்றையும் மேற்படி வல்லரசுகளின் கவனத்துக்குக் கொண்டுவர விழைகின்றோம்.

“அகிம்சை என்பது ஓர் ஆக்கசக்தி, அதுவே பலவான்களின் ஆயுதம், ஆண்மைக்கு அழகு அகிம்சை.... அகிம்சை என்பதே ஒரு விஞ்ஞானம்!....”