பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“பாரதநாடு
பார்க்கெலாம் திலகம்!”

“நாம் அனைவரும் இந்தியர்: நமது. தாய் நாடு பாரதம். இயற்கையாகவே நாம் விரும்பி மேற்கொண்டது இந்திய தேசம்.

பாரத நாட்டுக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். தலைவர் நேரு அவர்களின் வழி நடப்போம்.

பாரதத்தைப் பாதுகாக்க உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் தியாகம் செய்ய நாம் சித்தமாக. இருக்கிறோம்.

இந்த உறுதி மொழியை நிச்சயம். கடைப் பிடிப்போம். தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மீது ஆணை!”

பாட்டுக்கொரு புலவன் என்று ஏற்றிப் போற்றப்படுகின்ற பாரதியாரின் எண்பத்தோராவது பிறந்த நாள் விழா டிசம்பர் 11ம் தேதியன்று தமிழகத்தின் தலை நகரில் வெகு சிறப்புடன் நடந்தேறியது. அவ்வமயம், நம் நம் மாநில முதலமைச்சர் காமராஜர் மேற்கண்ட பாதுகாப்புப் பிரக்ஞையை மேற்கொள்ள, மக்கள் கூட்டம் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டது: கட்டுண்டது!

பலவகையிலும் சிறப்புடையதாக விளங்குகிறது இவ்விரண்டின் பாரதி விழா. இதுவரை பார்த்தி மறைந்த நாளையே நாம் பாரதி விழாவாகக் கொண்டாடினோம்.