பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

கவிக்கு இறப்பில்லை என்ற உண்மையை உணர்ந்து, இப்பொழுது, பாரதி பிறந்த நாளையே பாரதி விழாவாகக் கொண்டாட முற்பட்டிருக்கிறோம். அத்துடன் பாரதி விழா அரசாங்க விழாவாகவும் கௌரவிக்கப்பட்டிருக்கிறது. காலத்தினால் இறவாத நாட்டுப் பற்றுக் கவிகளைப் படைப்பவனே மக்கள் கவிஞனாகவும் தேசிய மகாகவியாகவும் இறவாப் புகழ் எய்த முடியும். இவ்வகையில் பாரதியின் தேசப்பற்றும் தியாகமனமும் அயலவனைச் சாடுகின்ற வீரமுழக்கமும் அனைவரும், ஒன்றுபட வேண்டுமென்கிற தேசிய ஒருமைப்பாட்டுக் குணமும் அவரது பாடல்களிலே விரவிக் கிடப்பதை நாம் காண்கிறோம். அப்படிப்பட்ட கவிதைகள், இன்றைய நம் நாட்டின் நிலையில் அடுத்துக்கெடுத்த ஈனச் சீனர்களின் மண்ணாசை வெறியினால் நம்மை வலிய வம்புக்கு இழுத்துக்கொண்டிருக்கின்ற இந்தச் சங்கடமான நிலையில், நமக்குப் போர்ப் பரணிபாடி, நம்மவர்களிடையே தேசீய எழுச்சியையும் நல்க பெரிதும் உதவியாக இருந்து வருகின்றன.

கண்ணீரால் காக்கப்பட்டிருக்கும் நம் சுதந்திரப் பயிரைக் கட்டிக்காக்க பாரதியார்படும் கவலை கொஞ்சமா, நஞ்சமா?

கிழக்கொன்றுமாகவும் மேற்கொன்றுமாகவும், வடக் கொன்றாகவும் தெற்கொன்றாகவும் சிதறிக் கிடந்த பாரத மக்கள் தங்கள் தங்களது கட்சிப் போர்வைகளை உதறி வீசி எறிந்துவிட்டு, எரிந்துகொண்டிருந்த நாட்டின் மானம் காக்கும் வேள்வியில் குதித்து, ஒன்றுபட்ட தேசிய உணர்ச்சி பூண்டு செயற்பட்டு வரும் இந்த மகத்தான ஐக்கியத்தைக் கண்டுமா, இந்தச் சீனன் வெருண்டு ஓடாமல் இருப்பான்? “ஆயிரம் உண்டிங்கு ஜாதி, அன்னியர் வந்து புகல் என்ன நீதி?” என்று பாடிய பாரதி இன்றிருந்திருந்தால், நமது இமயமலையில்