பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காங்கிரசுக்கே
ஓட்டுப் போடுங்கள்!

இந்தியத் துணைக் கண்டத்திலே எங்கு பார்த்தாலும், பொதுத் தேர்தலின் பரபரப்பு சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கும் நெருக்கடியான நேரம் இது. பாரதத்தின் எதிர் காலத்தைப்பற்றி நிர்ணயம் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும், இந்நாட்டு மக்களின் வாக்குப் பதிவுகளிலே முடிவு பெற வேண்டிய வேளை இது, இன்னும் மூன்று வாரங்களில் இந்தியா முழுவதிலும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தகைய இக்கட்டான சட்டத்தில் இருக்கும் - நாம், நம்மைப்பற்றியும் நம்மை ஆளும் காங்கிரஸ் மகாசபையைப் பற்றியும் நன்றாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டு காலமாக நாய் வெள்ளையரின் ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தோம், தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுக் கிடந்த பாரத தேசத்தை வாழ்விக்க வந்த ஜோதியாக அண்ணல் காந்தியடிகள் தோன்றினார். உடல், பொருள், ஆவி அனைத்தையும் சர்வபரித் தியாகம் செய்து, பிறந்த நாட்டின் விடுதலைக்கென தங்களையே அர்ப்பணம் செய்ய மாபெருந் தலைவர்கள் பலர் முன் வந்தார்கள். அயலவரின் அடக்கு முறைச் சட்டங்களுக்கு அடங்கிக் கிடக்காமல், “வெள்ளையனே, வெளியேறு!” என்று கோஷமிட்டார்கள்: சிறைப்பட்டார்கள். பாரதத் தாயின் அடிமை விலங்குகளை அறுத்தெறிவதே தங்கள் தலையாய லட்சியம் என்ற முடிவைக் கைக்கொண்டு, “வந்தேமாதரம்” என்னும் தாரக மந்திரத்தை வான் முட்டப் பரப்பினார்கள். இதற்கிடையிலே, மாவீரர்