பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

நேத்தாஜி கடல் கடந்து சென்று, சிதைந்து கிடந்த இந்தியர்களை ஒன்று திரட்டி, சுதந்திரப் போராட்டத் திற்குத் தொண்டியற்றினார். “கட்டுண்டோம், பொறுத்திருப்போம்: காலம் மாறும்” என்ற கோட்பாட்டில் அறவழி நின்று, காந்தீய நெறி நடந்து வந்த பாரத நாடு விடுதலை பெற்றது. நாம் இருக்கும் நாடு நமது என்பதை உணர்ந்தோம், நம்மை நாமே ஆண்டு கொள்ளத் தலைப்பட்டோம்.

இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் பெற்றுப் பதினான்கு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. ஆசியாவின் ஜோதியான உலகப் புகழ்பெற்ற நேருஜி, தம் நெஞ்சில், காந்தியடிகளை நிலை நிறுத்தி, அவர் காட்டிய பாதையில் நடந்து, நம் நாட்டையும் நடத்தி வருகிறார். பஞ்சசீலக் கொள்கைகளை உலக அரங்கில் வைத்து, அதன் மூலம் இந்தியாவின் அறவழிப் பண்பாட்டை உலக நாடுகள் அனைத்தும் அறிந்துணரச் செய்துவரும் நேருஜியின் தலைமைப் பொறுப்பின் கீழ் ‘ஐந்தாண்டுத் திட்டங்கள்’ ஒவ்வொன்றாகச் செயற்படுத்தப்பட்டு, வெற்றி பெற்று வருகின்றன. பொருளாதாரம், உணவு, தொழில் போன்ற எல்லாப் பிரிவுகளிலும் காங்கிரஸ் ஆட்சி, அந்நிய நாட்டவர்களும் கண்டு வியந்து போற்றத்தக்க அளவில் மகத்தான வளர்ச்சி பெற்று வருவதைப் பொதுமக்கள் அத்தனைபேரும் பரிபூரணமாக உணருவார்கள் . தன்னகத்தே மாபெரும் வரலாற்றுப் பெருமையைக் கொண்டிருக்கும் நமது காங்கிரஸ் மகாசபை தான் இந்தியாவின் தன்னேரில்லாத உயிர்ச் சக்தி என்பதையும் அனைவரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான், பொதுத் தேர்தல் அண்டி வந்து கொண்டிருக்கிறது. பல தரப்பட்ட கட்சிகள் தேர்தலில் - போட்டியிடுகின்றன. ஐக்கிய இந்திய தேசீயத்தில் பிரிவினையை வளர்க்க முனைந்த திராவிட முன்னேற்றக் கழகம், “திராவிட நாடு