பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

அவர்களுக்குக் கடும் போட்டி இருந்தது. நேருஜியின் வெற்றியை நாட்டுமக்கள் முன்கூட்டியே நிர்ணயம் செய்தாற்போன்று, காமராஜ் அவர்களின் கெலிப்பு குறித்தும் ஏகமனதான அபிப்பிராயம் கொண்டிருந் தார்கள். அவ்வாறே, காமராஜ் அவர்கள் மகத்தான வெற்றி பெற்றுவிட்டார்கள். இது தமிழகத்தின் வெற்றி. ‘உள்ளத்தில் ஒளி உண்டானால் வாக்கினிலே ஒளி உண்டாம்’ என்ற வாக்குக்கு ஏற்றபடி, நாளெல்லாம்-தம் வாழ் நாளெல்லாம் நாட்டுமக்களைப் பற்றியே சிந்தித்து அரும்பணி இயற்றிவரும் காமராஜ் அவர்கள் இம்முறையும் வெற்றி பெற்ற சுபச் செய்தி, தமிழகத்தின் வருங்காலச் சிறப்புக்கும் வளப்பமான வாழ்வுக்கும் அமைந்துள்ள ஒரு சுப சகுனமாகவே உருவாகியுள்ளது என்பதை நாம் எண்ணிப் பெருமைப்பட வேண்டுமல்வா? பொது நலத் துறைகளில், அஸ்திவாரக்கல் அமைத்து ஆரம்பித்து வைத்தும், திறப்பு விழா நடத்தித் துவக்கியும் வைத்த பெருமை, நமது மதிப்புக்குரிய முதலமைச்சரைப்போன்று, பாரதத்திலுள்ள பிறமாகாணத் தலைமை அமைச்சர்களுக்கு இருக்கமுடியாது, அந்த முறையில் பொதுமக்களுடன் இனைந்து தொண்டாற்றி, அசல் தொண்டராகவே மாறி விட்டிருக்கிறார், இத்தகைய தியாக சீலரை தமிழகம் பெற்றது பூர்வ புண்ணியமேயாகும்!

தி. மு. கழகம், இந்தத் தேர்தலில் தார்மீக அடிப்படையை மீறிய வழிகளில் சுவரொட்டிகள் அச்சடித்தும் அரசியல் நாகரிகம் கடந்த வகையில் ‘அதிகப்பிரசங்கித் தனமாக’ப் பேசியும் எழுதியும் வந்தார்கள். குருடனுக்குக் குருடனே வழிகாட்டியாக அமைந்த கதையாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கைகொடுக்க முனைந்த சுதந்திரக்கட்சியின் அதிபர் ராஜாஜி, கடைசியில் தம் கட்சி மண்ணைக் கவ்விய பரிதாப நிலையைக் கண்டு புலம்பும் கட்டத்தில் நிற்பதை நாம் காணுகிறோம்: அதுமட்டுமா? காஞ்சித்தலைவரின் ‘மகத்தான தோல்வி’யையும் கண்டு விட்டோம்! தி. மு. கழகத் தலைவர் அண்ணாத்துரையின்