பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தோல்வி தி. மு. க. வின் தோல்வி என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஏனெனில், ஒரு தலைவரின் வெற்றிதோல்விகள் தாம், அத்தலைவரைப் பின்பற்றுகிற மக்களுடைய மனங்களின் பிரதிபலிப்புகளாக அமைய முடியும், ஆகவே, தி. மு. கழகத்திடம் பொதுமக்களுக்குள்ள நல்லெண்ணம் சிதைந்து விட்டதென்பது தெள்ளத் தெளியப் புலனாகிவிட்டது. இத்தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பிடித்துக்கொண்டதால் மட்டுமே அவர்கள் மார் தட்டிப் பேச வழியில்லாமல் போய்விட்டது. எதிர்க் கட்சியாக அமையும் இவர்கள் நாட்டுப் பிரிவினைக் கொள்கையுடையவர்கள்! முதலமைச்சர் - ஐயப்படுகிற மாதிரி, எந்த அளவுக்குப் பொறுப்புடனும் பண்புடனும் இந்தப் ‘புதுமுகங்கள்’ செயலில் இறங்கப் போகிறாகளோ ?

காந்திஜி ஒருமுறை குறிப்பிட்டார், “நான் ராஜரிஷி வேடம் புனைந்து கொண்டு ராஜதந்திரியாக உலவ ஒரு போதும் இணங்கேன்!” என்று. காந்திஜியின் பேரைச் சொல்லி, புதுப் புனைவடிவம் பெற்று உலவித் திரியும் முதுபெருங்கிழவர் ராஜாஜி சத்தியத்தைச் சோதிக்கத் தலைப்பட்டார். கடைசியில் சத்தியமே அவரைச் சோதித்து விட்டது. சத்தியத்தின் வடிவமாக அமைந்த பொதுமக்கள் ராஜாஜியை மண்ணைக் கவ்வச் செய்து விட்டார்கள். புறத் தூய்மையோ அகத்தூய்மையோ கடுகளவும் இல்லாதவர் ராஜாஜி என்பது அவரது கொள்கை மாற்றத்திலிருந்து புரிந்தது. இவ்வுண்மையை தற்சமயம் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள் நாட்டு ஜனங்கள். பதவியிலிருக்கையில் ஒரு பேச்சும், பதவி போனவுடன் ஒரு பேச்சுமாகப் பேசி, அரசியல் கோமாளியாகவே ஆகி விட்ட ராஜாஜியின் முதற்தோல்விக்கு பிள்ளையார் சுழியிட்டார் பேராசிரியர் ரங்கா, ஆளும் காங்கிரஸாருக்கு மட்டும் ஓட்டுப் போடாதீர்கள். வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள்!” என்று தம் கைப்பட எழுதி வெளியிட்டு நாடகமாடிய சுதந்திரக் கட்சியின்