பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரும் பொற்காலம் இது. இந்நிலையே, அவர்களது மகத்தான உன்னதத்துக்கு ஓர் அத்தாட்சி. அத்தகை சீரிய பாக்கியத்தில் நாங்களும் அணியாக அமைந் பங்குபற்ற விழைகிறோம்.

பூக்கடைக்கு விளம்பரம் தேவையோ, தேவையில்லையோ, தெரியவில்லை. ஏனென்றால் காலம் மாறிவிட்டது.

ஆனால் பூவுக்கு விளம்பரம் தேவையில்லை. பூஎனில் மணமுள்ள பூ என்பதே பொருள்.

அதேபோல, பூவைக்கும் விளம்பரம் தேவையில்லே ‘பூவை’யில் பூ இருக்கிறது மணமும் இயல்பா குணமாக நிறைந்திருக்கிறது அல்லவா? அதுவே பூவையின் பெயருக்குக் கிடைத்திருக்கிற ஒரு விசேஷட தானே!

“உமா” இதழின் பொறுப்பாசிரியராக அன்பர் பூவை எஸ். ஆறுமுகம் பணி இயற்றிய காலை, அவர் செய்துபார்த்து, செய்து காட்டிய சோதனைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. அவற்றின் மகிமையை — மதிப்பை — உயர்வை இலக்கியத் துடிப்புக் கொண்ட எவரும் எக் காலத்தும் மறக்கமுடியாது. அத்தகைய மறக்கமுடியாத பணிக்கு ஒரு சிகரமாக அவர் அவ்வப்போது எழுதிவந்த தலையங்கங்கள், விசேஷக் கட்டுரைகள் பலவற்றில் சிலவற்றைத் தொகுத்து இப்போது வெளியிட்டிருக்கிறோம் தலைப்புக் கட்டுரை மட்டும் புதிது. பாகிஸ்தானத்தின் பண்பிழந்த போக்கைக் கண்டிக்க அங்கங்கே பல இடங்கள் காத்துள்ளன. தலைவரின் பேச்சுக்கள் எதிரிகளுக்கு ஓர் எச்சரிக்கையாகவும், நமக்கு ஒரு தூண்டுதலாகவும் அமைந்துள்ளன.