பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முதல் குடியரசுத் தலைவரின்
கடைசிப் பேருரை

‘ஹரிஜன்’ பத்திரிகையில் ஒரு சமயம் மகாத்மா காந்தி அடிகள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

“...உங்களிலே சிலர் ‘காந்தி பக்தர்’ என்று சொல்லப்படுகிறார்கள்; அந்தப் பெயர் பிரயோசனமில்லை. அதைவிட, ‘அகிம்சா பக்தர்’ என்று சொன்னால் என்ன? ஏனென்றால், காந்தி என்பவரிடம் நன்மையும் தீமையும், பலமும் பலவீனமும், அகிம்சையும் இம்சையும் கலந்தே காணப்படுகின்றன. ஆனால், அகிம்சையோ எந்தவிதக் கலப்பும் அற்ற தூயவடிவமாகும்!...”

முதலில் தன்னை உணர்ந்து புரிந்து கொண்டு, அப்பால் உலகத்தவர்க்குத் தன்னை உணர்த்திப் புரிய வைக்கும் பரிபக்குவ நிலை கைவரப் பெற்றவனே ஞானியென மதிக்கப்படுகிறான். இவ்வகைப்பட்ட ஞானிகளுக்கெல்லாம் ஞானியாக நம்மிடையே வாழ்ந்த வாழ்ந்து காட்டிய தவயோக ஞானியான அண்ணலின் மேற்கண்ட அகிம்சைத் தத்துவம் பொன்னெழுத்துக்களிலே வடிவம் பெற்றுள்ள மூதுரையாகும். இம்முதிய மொழியான அகிம்சைத் தத்துவ நெறியில் காலூன்றி நின்றுநிலைத்து-பண்பட்ட போறிஞர்களுள் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் : குறிப்பிடத் தகுந்தவர் ஆவார். “பூரண ஞானம் பொலிந்த நன்னாடு” என்று பாடிய பாரதியின் கவிக்குரலுக்கு வாய்த்த எதிரொலிபோல விளங்கும் டாக்டர் பிரசாத் அவர்கள், இந்தியக் குடியரசின் முதற் தலைவராக கடந்த பத்தாண்டு காலத்