பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

திற்கும் மேலாக நம்மிடையே விளங்கி, தமக்கும் தம் தாய்த்திரு நாட்டுக்கும் பெருமை தேடிக்கொண்ட பான்மைமிகு சரித்திரத்தை வரலாறு என்றென்றும் நினைவிற்கொள்ளும்!

தம்முடைய பதவிக்காலம் நிறைவெய்தி, விடை பெற்றபோது, புதுப் பார்லிமெண்டைத் துவக்கி வைத்துப் பேசிய ஜனாதிபதியின் கடைசிப் பேருரை உலக அரங்கத்தின் கவனத்தைக் கவர்ந்தது.

“நாட்டிலே ஜன நாயக சோஷலிஸ சமுதாயத்தை நிறுவ திறம்பட நடவடிக்கைகள் எடுத்து, உறுதியான கொள்கைகளைக் கடைப் பிடிப்பதே இந்தியக் குடியரசின் உயிர்ப்பான நோக்கமும் லட்சியமும் ஆகும்; இதன் மூலம் தான் நாடு முன்னேறி, பாரத மக்கள் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு ஏற்பட்டு, உற்பத்தி பெருகி, சமூகநீதி நிலைக்க முடியும்!...”

புதிய பாராளுமன்றத்தின் இணைப்புக் கூட்டத்தில் இவ்வாறு தம்முடைய அழகிய உரையைத் தொடங்கி, அதன்பின் இன்றையப் பிரச்சினைகள் குறித்தும் நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் அற்புதமான கருத்துக்கள் சிலவற்றையும் எடுத்துரைத்தார்.

நாட்டின் முதல்வரது மொழியாற்றலைப் போற்றுவதற்கு முன்னதாக, இன்றைய உலகச் சூழலையும் நாம் மறந்து விடலாகாது. காங்கோ, பெர்லின், லாவோஸ், அல்ஜீரியா போன்ற பிரச்சினைக்குரிய பகுதிகளின் பிரச்சினைகள், கொந்தளிப்பு அடங்கிய நிலையில் இருந்து வருவதை நாம் காண்கிறோம். உலகப் பெரும் போரைத் தடுத்து நிறுத்தும் பணியில், ஜெனிவா படைபலக் குறைப்பு மாநாட்டின் பலன் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.