பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


நம் பாரதத்தின் இன்றைய நிலையையும் நாம் எண்ண வேண்டுமல்லவா? அண்டை நாடான பாகிஸ்தானம் வேளைக்கொரு பேச்சும், நாளுக்கு ஒரு வேஷமுமாகக் கூத்து நடத்திவருகிறது. காஷ்மீர் சீனா சிக்கல்கள் வேறு. இவை நீங்கிய ஏனைய சின்னஞ்சிறு உள் நாட்டுக் குழப்பங்களும் நமக்குத் தலைவேதனையைத் தராமல் தப்பவில்லை, இவை எல்லாவற்றையும் நெஞ்சில் இருத்தித்தான் தமது பேச்சை ஆரம்பித்து முடித்திருக்கின்றார் ராஜேந்திர பிரசாத்.

வெளி நாட்டு விவகாரங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், அணு குண்டு உற்பத்தி, படைக்கலப் பெருக்கம் போன்ற முனைப்புச் சக்திகளைத் தடுப்பதற்கான வழிவகைகளிலே அமைதி நிலவச் செய்யும் வண்ணம் பாரதம் அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி, தன்னால் இயன்ற தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

“ஜன நாயக சோஷலிஸ சமுதாயத்தை இந்நாட்டில் அமைப்பதற்குச் சரியான குறிக்கோள்களை பாரதம் அனுசரித்துக் கடைப்பிடிக்கும். இந்த லட்சியத்தை அடைவதற்கு உறுதியான கொள்கைகளைப் பின்பற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமும் கவலையுமாக இருக்கும். இவைகளை நிறைவேற்றி, எல்லா மக்களும் சமமான வாழ்க்கை வசதிகளுடன் வாழ வழி செய்யும் நம் காங்கிரஸ் ஆட்சி எனவே, சமுதாய நீதியும் காலக் கிரமத்தில் பண்பட்டுத் தழைக்கத் தொடங்கும் என்பதும் நிச்சயம்...” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய விழிப்புப் பெற்ற மக்களிடையே சகோதர உணர்வுடன் கூடிய ஒன்றுபட்ட உள்ளப்பிணைப்பு இரண்டறக் கலந்து உறவாட வேண்டிய அவசியம் பற்றி திரு. பிரசாத் அவர்கள் அடிக்கடி நினைவூட்டிய