பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

பெறுகின்ற நிலைமை உருவானால், மதிப்புக்குரிய பாரதப் பிரதமரின் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக, தேவநாகரி வரிவடிவத்தை ஏற்றுக்கொள்ள மூன்றுகோடித் தமிழ் மக்கள் ஒப்பவேமாட்டார்கள், இது உறுதி. ஏனென்றால், இது மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் தன்மானப் பிரச்சினை: தாய்மொழிப் பிரச்சினை!

தமிழுக்குத் தேவநாகரி லிபியா?

நாம் எண்னிப் பார்க்கிறோம். அதே சடுதியில், தமிழ் மொழியின் தனித் தன்மையையும், தெய்வத் தன்மையையும் நாம் எண்ணி நோக்க வேண்டியவர்களாகவும் ஆகின்றோம்.

தமிழுக்கு முதல் இலக்கணம் செய்தவன் குடமுனி. அம்முனிக்கு முதன் முதலில் தமிழைப் போதித்தவன் சிவபெருமான், தமிழ் ஆதிமொழி: அசல் மொழி. பிற தென்னிந்திய மொழிகளினின்றும் தமிழ் பிறந்ததென்று முன்னர் ஒருமுறை வாதம் செய்தவர்களுக்கு, “தமிழ் என்றால் இனிமை: அதன் காரணமாகவே தமிழுக்கு இப்பெயர் வந்தது. ஆகவே; இதுவே அசல் மொழி,” என்று சூடு கொடுத்தார் மகா மகோபாத்தியாய டாக்டர் ஐயர் அவர்கள்.

வீர மாமுனிவரைப் பற்றி நாம் அறிவோம். அவர் இத்தாலிய நாட்டில் பிறந்தவர், தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் கற்று முடித்த பின், தமிழ் மொழியே அனைத்தினும் சாலச் சிறந்ததென்ற முடிவுக்கு வந்து, ‘சதுரகராதி’யையும் ‘தேம்பாவணி’யையும் தமிழில் உருவாக்கினார்.

இறையைப் போற்றி வணங்க உதவுகின்றன தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற தமிழ்ப் பாடல்கள். மற்றெம்மொழியிலும் இயற்ற வாய்ப்பிழ்ந்த