பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

நவீனப் படிப்பு முறையை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் வழிகாட்டியாக அமைந்து, அமைத்த குருகுலம் தான்: ‘சாந்தி நிகேதனம்’. 1900 டிசம்பரில் ஆரம்பமானது இது. இந்தியக் கலாசார வழித் தொடர்பும், புதிய சமுதாயத்தின் தென்பு மீட்டும் லட்சியங்களுமே இப்பள்ளிக்கு ஆதார சுருதியாயின, ‘உலகப் பல்கலைக்கழகம்’ என்னும் கவிபிரானின் லட்சியக் கனவுக்கு அத்தாட்சியாக 1921 டிசம்பரில் ‘விஸ்வபாரதி’ தோன்றிற்று.

கவிஞன் யார்?

பாமர மனிதனின் கற்பனை மனத்துக்கும் ஊட்டம் கொடுத்துப் பேணும் செவிலித்தாய்தான் இந்தக் கவிஞன்! இயற்கை அன்னையின் மாண்பு மிகுந்த மடியில் தவழ்ந்து வளர்ந்தார் தாகூர். இயற்கை நலம் அவருக்குச் சேம நிதியானது; வெட்ட வெட்ட கொட்டிக் காட்டும் காவியச் சுரங்கம் ஆனது. “கவியென்று நாம் கௌரவிக்கும் ஒருவனிடத்தில் உள்ள சிறப்பு யாதெனில், நாம் சொல்ல விழைவதையெல்லாம் அவன் ஒருவனே அழகாகச் சொல்லி மூடிக்கின்றான்.” கவிஞனுக்கு வரம்பறுக்கிறார் கவியரசர். அவரது முடிவுக்கே முத்தாய்ப்பு வைக்கின்றாள் இயற்கை அன்னை. “நாம் இயற்கையின் எழிலிலே இன்பத்தையே காண்கிறோம்; உண்மையையே தரிசிக்கிறோம்; இயற்கை உலகிலும் ஒழுக்க உலகத்திலும் நாம் அழகின் ஒருமைப் பாட்டையே கண்டு இன்புறும்போது. நாம் கலையின் போக்கை சர்வசு தந்தரமாக வெளியிட முடிகிறது!” இப்படிப்பட்ட நுண்ணிய கருத்துரைகளை நுண்மாண் நுழை புலம் அமைத்துச் சமைத்திட ரவீந்திரரால் தானே முடியும்!

ஆங்கிலப் பாடல்களும், வைணப் பாசுரங்களும், உபநிஷத்துக்களும் தாகூரின் இளங்கவியுள்ளத்தை மேலும் தூண்டிவிட உதவின. ‘காலைப்பாடல்கள்’ புனைந்தார், அழகின் இயற்கைக் கவர்ச்சியில் லயித்திருந்த