பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

வீரம் உண்டு, வீரமுள்ள இடத்தில் அன்பு உண்டு. ‘ஈர நெஞ்சினர் யாதும் குறைவிலார், வீரமென்னால் விளம்புந் தகைய தோ’ என்பது சேக்கிழார் திருவாக்கு. வறுமையிற் செம்மை - அன்பு வீரம். தமிழ் முரசு - தமிழரசு சிவஞானம் பொலிக, பொலிக!” என்று தமிழ்த்தென்றல் திரு வி. க. அவர்கள் சிலம்புச் செல்வரைப் பற்றிக் கூறியுள்ளதில் ஒரு பகுதியை இப்பொழுது நினைவூட்டுகிறோம்.

வாழ்க்கைச் சதுரங்கத்திலே அரசியலைச் சூதாட்டக் காயாக்கி விளையாடும் அரசியல் வாதிகளுக்கு இலக்கியக் கடலில் மூழ்கித் திளைக்கும் ஆர்வம் ஒருபோதும் உண்டாவதில்லை. இவ்வுண்மைக்கு சரித்திரத்தின் பின் பகுதிகள் சான்றாகும். அரசியல், இலக்கியம் என்ற மாறுபட்ட இருதுருவங்களை இன்று ஒன்றாக்கி இணைத்துக் காட்டிய பெருமைக்குரிய தமிழ்ப் பெயர் ஒன்றே ஒன்று உண்டு - அதுதான் ம. பொ. சி!

“தலைவர் சிவஞானம் சிறந்த தமிழறிஞர்; சிலப்பதிகாரத் தமிழர்; வீறு பெற்ற பேச்சாளர்: சொல்லும் செயலும் ஒன்றான வினைத்திட்ப முடையார்; நாட்டிற்கே உயிர்வாழும் தியாகி: எல்லா விடுதலை போராட்டங்களிலும் சிறை சென்ற வீரர். விடுதலை பெற்ற தமிழரசை நிலை நாட்ட உணர்ச்சி கொண்டெழுந்த தனித் தமிழர்.” என்று புகழ்மாலைகள் சூட்டுகிறார் யோகி திரு சத்தானந்த பாரதியார்.

“தமிழினத்தின் உயர்வை அவற்றின் மூலம் மக்களுக்குப் புலப்படுத்துவதற்காகவே அவர் தமிழ் இலக்கியங்களைக் கற்கிறார்; இது மிகவும் பயன் தரும். செயல்,” என் பாராட்டியிருக்கிறார் கவிமணி அவர்கள் தேச விடுதலைக்காகச் சிறையிலே செக்கிழுத்த தவப்புதல்வனைப் பற்றி, நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ வடிகளைப் பற்றி, கயத்தாற்றில் தொங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அந்நாளில்