பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தென்னைமரத் தீவினிலே...

விட்டேன். எல்லாம் உன்னுடைய வாழ்த்துக்கள் தான்” என்று தன்னுடைய திறமையையும் அதே சமயம் மகிழ்ச்சியையும் ஒரே வரியில் மாமா வெளியிட்டார்.

பரமகுரு “ரொம்ப சந்தோஷம் மாமா! எப்பொழுது திரும்புகிறீர்கள்” என்று கேட்டார்.

உடனே பொன்னம்பலம், “அதற்குள் சந்தோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதே இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லப் போகிறேன். இதை நீ என்ன; யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம்!”

“சஸ்பென்ஸ் இல்லாமே சீக்கிரமா சொல்லுங்கள் மாமா!”

“ஏண்டா அவசரப்படறே ! டிரங்கால் பில்லை உன் கம்பெனியா கொடுக்கப் போகிறது. கால் மணி உன்னோடு சந்தோஷமாக பேச வேண்டுமென்று மூன்று மணியிலிருந்து முயற்சி பண்ணுகிறேன். நீ ஆளே அகப்படலே. உன் மகாநாடு நல்லபடியா நடந்துதா?”

“அது நல்லா நடந்தது மாமா! நீங்க விஷயத்தைச் சொல்லுங்க,” என்று பரமகுரு அவசரப்படுத்தினார். மாமா ஒரே குஷியில் இருக்கிறார் என்பதை அவருடைய குரலிலிருந்தே பரமகுருவால் உணர்ந்து கொள்ள முடிந்தது.