பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

99

“உன் அம்மா எல்லாரும் சுற்றுலா முடிந்து வந்து விட்டார்களா?”

“இன்னும் வரவில்லை! அவர்களை எதிர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!”

“சரி, நீ என்னிடம் புறப்படும்போது ஞானாம்பாளைப் பார்த்துவிட்டு வரச் சொன்னால் அல்லவா? அது மிகவும் நல்லதாகி விட்டது. அவளே எனக்கு கடிதம் எழுதி வரவழைப்பதாக இருந்தாளாம். ஞானாம்பாளுக்கு உடம்பு ரொம்பவும் மோசமாகி விட்டது. சமீபத்தில் விஷ ஜூரம் வந்து பிழைத்திருக்கிறாள். தன் தம்பியை நம்பி இருந்தாள்; அவன் இவளை பார்ப்பதே இல்லையாம். என்னைக் கண்டதும் கதறி அழுது விட்டாள்.

“வள்ளியம்மைக்கு நான் செய்த துரோகம் தான் இங்கே வந்து அனுபவிக்கிறேன்!” என்று கண்ணீர் விட்டு அழுதாள் உடனே நான் “உன் பேரன் அருண்ரியை பார்த்தேன். பரமகுருவோட வீட்டில்தான் இருக்கிறான். பையன் கெட்டிக்காரன். முகச் சாயலில் உன்னையே உரித்து வைத்திருக்கிறது பேச்செல்லாம் சிவபாதம் மாதிரி தோரணையில்தான் பேசுகிறான்,” என்று நான் சொன்னதுமே முகம் பிரகாசமாகி விட்டது.

அதிலிருந்து அருணகிரியையும், வள்ளியம்மையையும் பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறாள். நான் இங்கு வருவதற்கு முன்னமேயே, தன்