பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தென்னைமரத் தீவினிலே...

டேன். உங்க அம்மா ரொம்ப நல்லவள். நான் அவளுக்கு துரோகம் பண்ணிட்டேன். நீ அம்மாவைப் பார்த்ததும், பாட்டி உன்னையே நெனச்சு உருகிக்கொண்டு இருக்கா; பாட்டியை மன்னிக்கச் சொன்னா என்று சொல்லுவியா? அவள் மன்னித்தால் தான் என் மனம் சமாதானம ஆகும்! மீதியெல்லாம் பொன்னம்பலம் மாமா ஊருக்கு வந்ததும் உங்கிட்டேச் சொல்லுவாங்க. சாப்பிட்டியா? கொழும்பு எல்லாம் சுற்றிப் பார்க்கப் போயிருந்தாயாமே!”

“ஆமாம் பாட்டி. நாங்க எல்லாருமா போயிட்டு இப்பத்தான் வந்தோம் கதிர்காம முருகன் கிட்டே, “கன்யா”விலே இருக்கிற, ராவணனோட பிள்ளையார்கிட்டே, திருகோணேசுவரர்கிட்டே, கண்டியிலேயும்; ரூவான்வெலிசா புத்தர்கிட்டேயும் வேண்டிக்கிட்டேன் பாட்டி!”

“என்ன வேண்டிக் கொண்டாய் அருணகிரித் என்று ஞானாம்பாள் ஆசையோடு கேட்டாள்.

“பாபு, ராதா, தங்கமணி எல்லாருக்கும் இருக்கிற மாதிரி எனக்கும் ஒரு பாட்டி சிங்கப்பூர்லே இருக்காளாமே. அந்த பாட்டிக்கு ஏன் என்னைப் பார்க்கணும்னு ஆசையில்லை, என்று எல்லா கடவுளையும் கேட்டேன். இப்போ இங்கே வந்தவுடனே, நீங்க இப்படி கூப்பிட்டுப் பேசுவீங்க என்று நான் நினைக்கவே இல்லை பாட்டி. எனக்கு