பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

107

இன்னும் தன்னுள் இருக்கும் பயத்திலிருந்து விடுபடாதவளைப் போல் படபடப்பாகக் கூறினாள்.

இதைக் கேட்ட பரமகுரு திடுக்கிட்டார். “என்ன நடந்தது?” என்று எல்லோருக்கும் பொதுவாகக் கேட்டார்.

கல்யாணி நடந்த விஷயம் எல்லாவற்றையும் விவரமாக சொன்னாள்.

“அருணகிரி தன் உயிரையும் மதிக்காமல் குளத்திலே குதித்து தங்கமணியை காப்பாற்றினான்,” என்றாள்

பரமகுரு எண்ணிக் கொண்டார் ‘எத்தனை பெரிய விஷயம் நடந்திருக்கிறது; இதைப்பற்றி பெரிதாகச் சொல்லவேண்டுமென்று மாமிக்கு தோணவில்லை. அம்மா கூடச்சொல்லவில்லையே!’ என்று நினைத்துக் கொண்டார்.

தங்கமணி சொன்ன பிறகுதானே அருணகிரியைப் பற்றி மாமி சொன்னாள். இந்த அலட்சியம் ஏன்? வள்ளியம்மை மகன் ஏழை அருணகிரிதானே என்கிற நினைப்பா!

அருணகிரியின் வீரச்செயல் ஒரு மனிதாபிமான அடிப்படையில் எழுந்ததுதான். என்றாலும் அதனால் பயன் பெற்றவர்களுக்கு அவனை பலர் முன்னிலையில் பாராட்டக் கூட மனம் வரவில்லை.

ஓ! இதுவே நாளையானால்? அருணகிரியின் மதிப்பு ஐம்பது லட்சத்திற்கு மேல்