பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தென்னைமரத் தீவினிலே...

என்று அறிந்தவுடன், பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துக் கூட தங்கள் அன்பையும், நன்றியையும் இவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

பரமகுருவிற்கு அதற்குமேல் எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. “அருணகிரி! என்னோடு வா!” என்று அழைத்தபடி கை கழுவ எழுந்து, சென்று விட்டார்.

“மாமிக்கு ‘ஒரு குட் நியூஸ்’ சொல்லிவிடப் போகிறேன்!” என்று பேச்சைத் துவக்கினார் பரமகுரு!

“என்ன” என்கிற பாவனையில கல்யாணி தலைநிமிர்ந்தபோது, “கையைக் கொடுங்கள்,” என்று பரமகுரு மாமியின் கையைக் குலுக்கினார்

“மாமா சிங்கப்பூர் பிசினசை ரொம்ப லாபத்துக்கு முடித்து விட்டார்!”

“அப்படியா? போன் பண்ணினாரா?” என்றாள் கல்யாணி மகிழ்ச்சி பொங்க.

“ஆமாம்!”

“எப்போ? மத்தியானமே பண்ணிவிட்டாரா?”

“இல்லை! நீங்கள் எல்லாம் வந்த பிறகுதான். சிங்கப்பூரில் ஞானம் பெரியம்மாவுக்கு உடம்பு. ரொம்ப மோசமாக இருக்கிறதாம்,” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே பாபு, ராதா, தங்கமணி எல்லோரும் சேர்ந்து வந்து, “அப்பா