பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

109

எங்களுத் தூக்கம் வருகிறது நாங்கள் மாடிக்கு படுக்க போகிறோம்!” என்று கூறியபடி, வா அருணகிரி போகலாம்!” என்றான் பாபு.

“பாபு நீங்கள் எல்லாம் முதலில் போய் படுத்துக் கொள்ளுங்கள்; அருணகிரி பின்னால் வருவான்,” என்று அவர்களை அனுப்பிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்:

எல்லாரையும் பார்த்தபடி, அருணகிரிக்கும் புரியும் வண்ணம் சிங்கப்பூரில் பெரியம்மாவை மாமா சந்தித்ததிலிருந்து, வள்ளியம்மை மேலும், அருணகிரி பேரிலும் உயில் எழுதி வைத்திருக்கிற அத்தனை விஷயத்தையும் விளக்கமாகக் கூறி முடித்தார்.

இதைக் கேட்டதும், “உண்மையாகவா ஞானம் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறாள்?” என்று லட்சுமி அம்மாள் தன்னை மீறிய ஆச்சரியத்துடன் கேட்டாள்.

எல்லாருடைய கண்களும் அருணகிரியை மேயத் துவங்கின.

“பொன்னம்பலம் வீட்டிற்கு வந்ததும் இப்படி ஒரு அதிர்ஷ்டம் வரணும்னு கடவுள் உன் தலையில் எழுதியிருக்கிறார் போலிருக்கு அருணகிரி,” என்று லட்சுமி அம்மாள் அவனை இழுத்து அனைத்துக் கொண்டாள்.