பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

113

குமரேசன் தொடர்ந்து கூறினான் வள்ளியம்மைக்குத்தான் இந்த கதி என்றால் அவளுடன் சென்ற அருணகிரியைப் பற்றி இதுவரை ஒரு தகவலும் தெரியவில்லை. அவனையும் பாவிகள் கொன்று கொளுத்திப் போட்டிருப்பார்களோ! என்று தெரியவில்லை. ஒரே சமயத்தில் மனைவியையும் மகனையும் இழந்து விட்டேன்; இனி நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்” என்று கத்திக் கதறி விஜயன் தற்கொலைக்கே துணிந்துவிட்டார்.

“அவரை எங்களால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. எங்கள் கவலையெல்லாம் அருணகிரியை யாராவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான்” என்று குமரேசன் கூறிக் கொண்டிருக்கும்போதே பரமகுரு இடைமறித்துக் கூறினார். “அருணகிரி எங்களுடன்தான் இருக்கிறான். விமான நிலையத்தில், வள்ளியும், அருணகிரியும் எங்களைப் பார்த்துப் போக வந்தார்கள். வள்ளி அருணகிரியுடன் திரும்பிப் போகப் புறப்பட்ட போது என் மகன் பாபு, அருணகிரி தன்னுடன் தங்க வேண்டும், ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டான், அதேபோல் அருணகிரியும் விரும்பினான். வள்ளிதான் புருஷன் கோபிப்பான் என்று தயங்கினாள். நான்தான் அவளைச் சமாதானம் செய்து அனுப்பினேன்.

புறப்படும்போது, பையில் ஆரஞ்சுப் பழமும், ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தேன். வாங்கிக் கொள்ள ரொம்ப மறுத்தாள். ரொம்பவும்