பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தென்னைமரத் தீவினிலே...

 ஏற்றிச் செல்லவேண்டிய ‘ஏர்லங்கா’ விமானம் தயார் நிலையில் இருந்தது. அப்போது பாபு, கிளம்பிக் கொண்டிருந்த ஒரு விமானத்தையும்; ஆகாயத்திலிருந்து மெல்ல கீழே இறங்கித் தரையில் ஒரு சுற்றுச் சுற்றிவந்து தங்கள் எதிரில் வந்துநின்ற வேறு ஒரு விமானத்தையும் பார்த்தான்.

பாபு எல்லோருடனும் தங்கள் விமானத்தை நெருங்கியபோது, “இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் இலங்கை செல்லும் விமானம் புறப்படும்” என்கிற அறிவிப்பு ஒலித்தது.

சட்டென்று நினைத்துக் கொண்டவனைப் போல் பாபு, “நம்முடைய பெட்டிகள் எல்லாம் எங்கே அப்பா,” என்றான் பரபரப்புடன்.

பரமகுரு அமைதியாக பாபுவிடம், ‘ஏர்லங்கா’வின் வால் பகுதியைக் காட்டினார்.

விமானத்தை ஒட்டினாற்போல் நின்றுகொண்டிருந்த ஒரு டிரக்கிலிருந்து எல்லாருடைய பெட்டிகளும், சாமான்களும் ஒரு கன்வேயர் (மூட்டைகளை ஏற்றிச் செல்லும் இயந்திரம்!) மூலம் விமானத்திற்குள் நகர்ந்து கொண்டிருந்தது. அத்தனை சாமான்களையும் ஏற்றி முடிந்ததும் அந்த டிரக் நகர்ந்தது. உடனே அந்த வால்பகுதியும் மூடப்பட்டது.

இலங்கை செல்லும் பயணிகள் அனைவரும் விமானத்திற்குள் ஏறி தங்களுக்கென்று குறிப்பிட்