உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

119

களுடன் இறங்குவதையும் கண்டான். அவ்வளவு தான் அரசு விரோத காரியங்களில் ஈடுபட்டதற்காக விஜயனை கைது செய்தனர் போலீசார். அருணகிரியை பரமகுருவின் கையில் ஒப்படைத்தான் விஜயன்.

அழகிய கொழும்பு நகரம் சிலரது கோபத்தினால் அணு, அணுவாக பற்றி எரிந்து கொண்டிருந்தது.

புகழ் பெற்றிருந்த பழைய லங்கா தகனக் காட்சிகளை அப்பாவி இலங்கைத் தமிழர்கள் நிதர்சனமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

பத்திரிகைகளைப் புரட்டவே பரமகுருவிற்கு பயமாக இருந்தது. வானொலியில் கேட்ட வடிகட்டிய செய்திகளே வயிற்றைக் கலக்கின. யாழ்ப்பாணத்தில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே வைரம் மூண்டது. தமிழர்களின் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவைகள் கொளுத்தப்பட்டன.

பரமகுருவிற்கு தாம் பெரிய தவறு செய்து விட்டதாக உள் மனது உறுத்தியது. ஆரம்பத்தில் திட்டமிட்டபடி மாநாட்டிற்கு தான் மட்டும் தனியேப் புறப்பட்டு வந்திருந்தால் இந்த தொல்லைகள் எல்லாம் ஏற்பட்டிருக்காது.

அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வந்த இடத்தில் குடும்பத்தோடு வசமாக அகப்பட்டுக்