பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

135

விடு அருணகிரி. நான் போனால் போகிறேன். என் குழந்தை லீனாவை மட்டும் எப்படியாவது காப்பாற்றி வெளியே கொண்டு சென்று விடு. அவளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என் இறுதி ஆசையை நிறை வேற்றுவாயா அருணகிரி?” என்று அழுதாள்.

“சத்தியமாக உங்கள் குழந்தையை நான் காப்பாற்றுவேன். என்னை முற்றிலும் நம்புங்கள் லிசியா!” என்று அருணகிரியும் அழுதான்.

அவனது உறுதிமொழியில் நம்பிக்கை அடைந்து விட்டவளைப் போல் சில நொடிகளில் லிலியா இறந்து விட்டாள்.

லேசாக கீழ்வானம் சிவந்து கிழக்கு வெழுக்கத் துவங்கியிருந்தது. இரவு முழுவதும் மிகவும் பொறுப்புடன் கடமைகளைச் செய்து களைத்த சிங்கள ராணுவத்தினர் ஓய்வெடுக்கச் சென்று விட்டார்களோ என்னமோ கண்ணுக்கு எட்டிய துரம் வரை மனித நடமாட்டமே இல்லை.

நினைத்து நினைத்து அதிர்ச்சியில் அழும் குழந்தையை கையிலெடுத்துக் கொண்டு இரவு வந்த வழியை அரைகுறையாக நினைவிற்கு கொண்டு ஒரு வழியாக ஓட்டலை அடைந்தான் அருணகிரி.

துறைமுகப் பகுதியாதலால் அந்த அதிகாலை ஆறு மணிக்கே ஓட்டல் சுறு சுறுப்பாக இயங்கத் துவங்கியிருந்தது.