பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தென்னைமரத் தீவினிலே...

அருணகிரி வேகமாக லிப்டில் ஏறி தங்கள் அறை அழைப்பு மணியை அழுத்தினான்.

கதவைத் திறந்த லட்சுமி அம்மாளுக்கு எதிரே கையில் குழந்தையுடன் அருணகிரி நிற்பதைக் கண்டு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. ஆயினும் அதைப் பற்றி உடனே ஏதும் கேளாமல், “உள்ளே வா அருணா,” என்று அழைத்தாள்.

அருணகிரி வந்து விட்டதை அறிந்த கல்யாணியும் காந்திமதியும் முன் ரூமிற்கு வந்தனர். பேப்பர் படித்துக் கொண்டிருந்த பரமகுரு அதை மடித்து விட்டு உள்ளே வந்தார்.

எல்லாருடைய பார்வையும் அருணகிரியின் கையிலிருந்த குழந்தையின் மீதே படிந்திருந்தது.

ஆயினும் அருணகிரியாகக் கூறும் வரை அதைப் பற்றிக் கேட்க வேண்டாமென்று எண்ணினார்கள்.

இரவு முழுவதும் அவனை காணாமல், அனைவரும் உறங்காமல் இருந்து கவலைப்பட்டுக் கொண்டிருந்ததை கூறிய லட்சுமி அம்மாள், “எங்கேடா போயிருந்தே அருணகிரி ராத்திரி ஏன் வரவில்லை?” என்று கேட்டாள்,

அருணகிரி முதல்நாள் இரவு தந்தையுடன் புறப்பட்டதிலிருந்து லிஸியாவிற்கு சத்தியம்செய்து கொடுத்து விட்டு வந்தது வரை ஒன்று விடாமல்